Ad

புதன், 3 மார்ச், 2021

"சட்டப்பேரவைக்கு இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்!"- சி.டி.ரவி! உங்கள் கருத்து? #VikatanPoll

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான போட்டியில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் கூட்டணியில் பா.ஜ.க இடம்பெற்றிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை பெரியளவில் வெற்றியைப் பெற்றிராத பா.ஜ.க, இந்த முறை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது. அக்கட்சியின் அகில இந்தியச் செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி, நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், "நிச்சயம் பா.ஜ.க இந்த முறை தமிழக சட்டப் பேரவைக்கு இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏ-க்களை அனுப்பும்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-about-c-t-ravi-statement-on-bjp-victory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக