Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

"உழைப்பையும் பொருளாதாரத்தையும் திருடும் அந்த உறவு..." - எப்படிச் சமாளிப்பது? #EnDiary

என் வீட்டுக்காரர் தனியார் நிறுவனத்துல வேலைபார்க்குறார். மாமியார், மாமனார்கூட வசிக்கிறோம். எங்க தெருவுக்கு ஒரு தெரு தள்ளி இருக்கு, என் நாத்தனார் குடும்பம். அதுதான் எனக்குப் பிரச்னையே!

நாத்தனார் வீட்டுல வசதிக்குக் குறைவில்ல. கணவன், மனைவி, ஒரு பையன்னு நியூக்ளியர் ஃபேமிலி. தினமும் எங்க வீட்டுக்கு வந்து, தன் அம்மாவைப் பார்த்துட்டு கதைபேசிட்டுப் போவாங்க. அப்படி வரும்போதெல்லாம், அம்மாவும் பெண்ணுமா சேர்ந்துட்டு எனக்குத் தர்ற மென்டல் டார்ச்சரை நான் அதிகம் சொல்ல வேண்டியதில்ல. ஏன்னா, இங்க பல பெண்களுக்கும் இந்த டார்ச்சர் நடந்துட்டுதான் இருக்கு. அடிமைப்படுத்துறது, கொடுமைப்படுத்துறதுனு எல்லாம் இல்ல. ஆனா, ரொம்ப நுட்பமா என் உழைப்பையும், எங்க பொருளாதாரத்தையும் சுரண்டுறாங்க.

நான் கஷ்டப்பட்டு மாவு அரைச்சுவைப்பேன். அதுல பாதியை என் நாத்தனாருக்குக் கொடுத்து அனுப்பிடுவாங்க என் மாமியார். தினமும் சாயங்காலம் குழந்தையைக் கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வருவாங்க என் நாத்தனார். நைட் அவங்களை அழைச்சுட்டுப்போக அவங்களோட வீட்டுக்காரர் வருவார். உடனே என் மாமியார், 'அண்ணனுக்கும் அண்ணிக்கும் தோசை ஊத்தும்மா...’னு அந்தக் குடும்பத்தோட டின்னரை, என்னை வெச்சே முடிச்சிடுவாங்க. வாரத்துல நாலு நாள் இப்டிதான்.

முழுமையாகத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்...



source https://www.vikatan.com/news/women/woman-shares-how-her-sister-in-law-and-mother-in-law-exploits-her-in-en-diary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக