Ad

புதன், 3 மார்ச், 2021

`அழுத்தம் கொடுத்த ராமதாஸுக்கு நன்றி..!’ - முதல்வர் பெயரை தவிர்த்த காடுவெட்டி குருவின் மகன்

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தில் அசைக்க முடியாத நபராக இருந்த காடுவெட்டி குரு மறைந்த பின்னர், அவருடைய மகன் கனலரசன் ‘மாவீரன் மஞ்சள் படை’ என்கிற இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

வரக்கூடியத் தேர்தலில் பா.ம.க. ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால், தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தார் கனலரசன். இந்நிலையில், வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியது அரசு. இதற்கு பெரும் முயற்சி எடுத்தது பா.ம.க. வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. வழக்குத் தொடர்ந்திருப்பதாக கூறியிருக்கும் கனலரசன், அக்கட்சிக்கு அளித்த தனது ஆதரவையும் விலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, வன்னியர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற உதவியதாக, பா.ஜ.க. தலைவர்கள், அமைச்சர் சி.வி.சண்முகம், ஒப்புதல் கொடுத்த ஆளுநர், அழுத்தம் கொடுத்த பா.ம.க., ஆதரித்த சீமான் என எல்லோருக்கும் நன்றி’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் கனலரசன். இதில் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி சொல்லாத கனலரசன், பா.ம.க.வுக்கு நன்றி சொல்லியிருப்பதுதான் கவனிக்க வேண்டியது.



source https://www.vikatan.com/news/politics/guru-son-thanks-ramadoss-in-reservation-issue-but-avoided-cm-name

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக