Ad

புதன், 3 மார்ச், 2021

"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி #5YearsOfPichaikkaran

" 'பிச்சைக்காரன்' படத்தோட கதையை சசி சார் என்கிட்ட சொன்னப்போ கேட்க ஆர்வமா இருந்தது. சார் கதையை சொல்லி முடிச்சவுடனே இதுல நான் நடிக்குறேன்னு சொல்லிட்டேன். நடிக்க மட்டுமல்லாம தயாரிக்கவும் செஞ்சேன். ஏன்னா, இந்தக் கதை மேல எனக்கு நம்பிக்கையிருந்தது. படத்தோட ஷூட்டிங் பாண்டிசேரி மற்றும் சென்னை ஏரியாவுல நடந்தது. சொல்லபோனா இந்தப் படத்துகாக பாண்டிசேரியோட ரிமோட் ஏரியாவுல பிச்சைக்காரங்களோட உட்கார்ந்து பிச்சை எடுத்திருக்கேன். முகம் முழுக்க கரியைப் பூசிக்கிட்டு பிச்சை கேட்டியிருக்கேன். நிறையப் பேர் தர்மம் பண்ணுனாங்க.

பிச்சைக்காரன்

சிலர், 'கை காழுல்லாம் நல்லாதானே இருக்கு. எதுக்கு இந்த பொழப்புனு' திட்டிலாம் இருக்காங்க. இவங்க திட்டுனதுக்காக நான் வருத்தப்படலை. ஏன்னா, நிஜ வாழ்க்கையிலும் நான் பிச்சை எடுத்திருக்கேன். வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன். தொடர்ந்து ஆறு மாசம் வரைக்கும் சிலருடைய ஆபிஸ் வாசல்ல வாய்ப்பு பிச்சை கேட்டு நின்னுருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டுதான் இப்போ இந்த நிலையில இருக்கேன். இதனால, எப்போவுமே பிச்சைகாரர்களை ஏளனாம பார்க்குற எண்ணம் எனக்குள்ள இருந்ததில்ல. பைனாஸியர் சிலர்கிட்ட தயாரிப்புக்காக பிச்சை கேட்டுட்டுத்தான் இருக்கேன்."

"இந்தப் படத்துக்கு சசி சார் முதல்ல 'ம்'னு பேர் வெச்சிருந்தார். ஏன்னா, 'அம்மா'வுடைய பேர்ல 'ம்' வரதுனால. ஆனா, நான் அடம் பிடிச்சு 'பிச்சைக்காரன்'னு பேர் வைக்க சொன்னேன். இந்தப் பேருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. முக்கியமா, படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் நிறையப் பேர் தயங்குனாங்க. காரணம், படத்தோட பெயர். எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண கஷ்டப்பட்டேன். முக்கியமா, தெலுங்குல படத்தை டப்பிங் செஞ்சு விற்றோம். அங்கே, 'பிச்சைக்காரன்'னு டைட்டில் (Bichagadu) வைக்க மாட்டோம்னுனாங்க. கண்டிப்பா, 'பிச்சைக்காரன்'னு பேர் வெச்சுதான் ரிலீஸ் பண்ணணும்னு சண்டை போட்டேன். இந்தளவுக்கு நிறைய சிரமங்கள் இந்தப் பெயருக்கு இருந்தது. எனக்கு சென்ட்டிமென்ட் இருக்கு. ஆனா, மூடநம்பிக்கைகள் இருந்ததில்ல."

விஜய் ஆண்டனி | பிச்சைக்காரன்

"படத்துல நடிச்சிருந்த அம்மா கேரக்டரின் முகம் எல்லாருக்கும் புதுசாயிருந்தது. படத்தோட கேரக்டர் ஒவ்வொருத்தவங்களையும் சசி சார்தான் செலக்ட் பண்ணினார். படத்தோட எல்லா வேலைகளும் இவர்தான் பண்ணுவார். இந்தப் படத்துல வந்திருந்த அம்மா பாட்டும் நல்ல ஹிட்டாச்சு. பாட்டுக்கான கம்போஸிங் பண்ணும்போது இந்தப் பாட்டுக்கு ரீச் இருக்கும்னு நினைக்கவே இல்ல. ஆனா, ஆடியன்ஸ் இதை ஏத்துக்கிட்டாங்க.

Also Read: “தமிழ் சினிமாவில் நடிக்க பத்து வருஷம் காத்திருந்தேன்!”

படத்தோட புரொமோஷனுக்காக சத்யம் கார் பார்க்கிங்ல ஒரு வீடியோ எடுத்திருந்தோம். இந்த வீடியோஸூக்கும் நிறைய வரவேற்பு கிடைச்சது. இந்த ஐடியாவை கொடுத்தது சசி சார்தான். படத்தோட ரிலீஸூக்கு ஒருநாள் முன்னாடி ஷூட் பண்ணி உடனே ரிலீஸ் பண்ணினோம். படத்துக்கு வரவேற்பு இருக்கும்னு நினைச்சோம். ஆனா, நூறு நாளைக்கு மேல படம் தியேட்டர்ல ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. எங்க டீமுக்கு எதிர்பாராத வெற்றியா 'பிச்சைக்காரன்' இருந்தது. இந்தப் படத்தோட வெற்றியைத் தொடர்ந்து இப்போ 'பிச்சைக்காரன் 2' ஷூட்டிங் சீக்கிரமே தொடங்க போறேன். இந்தப் படம் ரொம்ப பிரமாண்டமா இருக்கும்" என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் விஜய் ஆண்டனி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/vijay-antony-talks-about-his-movie-pichaikkaran-on-its-fifth-anniversary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக