விராலிமலை தொகுதியில் 3-வது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிடுகிறார். தொகுதியிலேயே முகாமிட்டுள்ள விஜயபாஸ்கர் தினமும், சுற்றிச் சுழன்று சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகிறார். கடந்த தேர்த்தலைப் போன்று தனது மூத்த மகள் ரிதன்யா பிரியதர்ஷினியின் கையில் மைக்கைக் கொடுத்து களத்தில் இறக்கிய விஜயபாஸ்கர், தனது இளைய மகள் அனன்யாவை வைத்தும் சென்டிமென்ட் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
தொகுதியில், விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பழனியப்பனோ, மக்களைச் சந்தித்து கண்ணீர்மல்க சென்டிமென்ட்டாகப் பேசி மக்களைக் கவர, விஜயபாஸ்கரும் தற்போது தொகுதிக்குள் உருக்கமாகப் பேசிவருகிறார். விராலிமலை தொகுதி ராசநாயக்கன்பட்டி மாதா கோயில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது, ``10 ஆண்டுக்காலம் உழைச்சு, உழைச்சு மக்களுக்காகக் கஷ்டப்பட்டு இந்த கொரோனாவிலும்கூட ஏழரை கிலோ எடை குறைஞ்சு இருக்கிறேன். எனக்கும் சுகர் இருக்கு,
நானும் மாத்திரை சாப்பிடுறேன். நான் நேரம் காலம் பார்க்காம, கரெக்டான நேரம் வாக்கிங் போயிட்டு, கரெக்டான நேரம் சாப்பிட்டுட்டு, இரவு சீக்கிரமா தூங்கி எப்பவும் நல்ல ரெஸ்ட்ல இருந்தால் என் உடம்பு நல்லா இருந்திருக்குமே... எனக்கும் சுகர் இருக்கு, எனக்கும் பிபி இருக்கு, எனக்கும் உடம்புல கோளாறு இருக்கு, எனக்கும் தலைசுத்தல் வருது, எனக்கும் மயக்கமா வருது. ஆனா, மனசுக்குள்ள வெறி இருக்கு. எடுத்துக்கிட்ட பொறுப்புல வேலையை ஒழுங்காச் செய்யணும்.
Also Read: விராலிமலை:`அவர் கண்ணீர் சிந்துவார்; நான் ரத்தம் சிந்துறேன்’- விஜயபாஸ்கர் போட்டா போட்டி பிரசாரம்
இந்த மக்களுக்காக ஏசுநாதர் சிலுவையைச் சுமந்த மாதிரி இந்த விராலிமலைத் தொகுதியை நான் சுமந்துகொண்டிருக்கிறேன். தயவுசெய்து சொல்கிறேன், உங்களுக்காக உழைக்கவே, வேலை பார்ப்பதற்காகவே பிறந்திருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் ஏசு என்னையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் மூலமாக என்னை ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன்" இவ்வாறு பேசினார். இது தேர்தல் போட்டியா அல்லது சென்டிமென்ட்டில் யார் வல்லவர் என்று நிரூபிக்கும் போட்டியா என்று மக்கள் யோசிக்கும் அளவுக்கு விராலிமலையில் உணர்ச்சி ஆறு ஓடுகிறது.
source https://www.vikatan.com/news/politics/vijayabaskar-melting-campaign-in-viralimalai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக