சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது பா.ஜ.க. இந்தத் தொகுதிகளில் போட்டியிடப் போகும் 17 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று டெல்லியில் வெளியிட்டது பா.ஜ.க.
வேட்பாளர்கள் பட்டியல்:
1. தாராபுரம் - எல்.முருகன்
2. காரைக்குடி- ஹெச்.ராஜா
3. அரவக்குறிச்சி - அண்ணாமலை
4. கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
5. ஆயிரம் விளக்கு - குஷ்பு
6. துறைமுகம் - வினோஜ் பி செல்வம்
7. திருவண்ணாமலை - தணிகைவேல்
8. திருக்கோயிலூர் - கலிவரதன்
9. மொடக்குறிச்சி - டாக்டர்.சி.கே.சரஸ்வதி
10. திட்டக்குடி - டி.பெரியசாமி
11. திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்
12. மதுரை வடக்கு - டாக்டர் பி.சரவணன்
13. விருதுநகர் - பாண்டுரங்கன்
14. ராமநாதபுரம் - குப்புராம்
15. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
16. நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி
17. குளச்சல் - பி.ரமேஷ்
பட்டியலில் கவனிக்கத்தக்கவை
1. தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் இன்று காலை பா.ஜ.க-வில் இணைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
2. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க-வுக்கு கொடுக்கபட்டதால், குஷ்புவுக்கு வேறு தொகுதிகளில் சீட் ஒதுக்கப்படாது என்று தகவல் பரவியது. இந்தநிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க-விலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்த ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம், நிச்சயம் சீட் கொடுக்க வேண்டும் என்று கறார் காட்டியதாகக் கூறப்பட்டது.
தி.மு.க-வில் ஆயிரம் விளக்கு தொகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படலாம் என்ற நிலை இருந்ததால்தான் அவர் பா.ஜ.க-வுக்கு தாவியதாகக் கூறப்பட்டது, இந்தநிலையில் அவருக்கு பா.ஜ.க-வில் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
3. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து பா.ஜ.க மகளிர் அணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் களமிறங்கவிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-candidate-list-for-tn-election-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக