Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆயிரம் விளக்கில் குஷ்பு; கமலை எதிர்த்து வானதி; அரவக்குறிச்சியில் அண்ணாமலை - பாஜக வேட்பாளர் பட்டியல்

சட்டமன்றத் தேர்தலி அ.தி.மு.க கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது பா.ஜ.க. இந்த தொகுதிகளில் போட்டியிடப் போகும் 17 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று டெல்லியில் வெளியிட்டது பா.ஜ.க.

வேட்பாளர்கள் பட்டியல்:

1. தாராபுரம் - எல்.முருகன்

2.காரைக்குடி- ஹெச்.ராஜா

3. அரவக்குறிச்சி - அண்ணாமலை

4.கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

5. ஆயிரம் விளக்கு - குஷ்பு

6. துறைமுகம் - வினோஜ் பி செல்வம்

7. திருவண்ணாமலை - தனிகைவேல்

8. திருக்கோயிலூர் - கலிவரதன்

9. மொடக்குறிச்சி - டாக்டர்.சி.கே.சரஸ்வதி

10. திட்டக்குடி - டி.பெரியசாமி

பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்

11. திருவையாறு - பூண்ட்.எஸ்.வெங்கடேசன்

12. மதுரை வடக்கு - டாக்டர். பி. சரவணன்

13. விருதுநகர் - பாண்டுரங்கன்

14. ராம்நாதபுரம் - குப்புராம்

15. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

16. நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி

17. குளச்சல் - பி.ரமேஷ்

பட்டியலில் கவனிக்கத்தக்கவை

1. தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் இன்று காலை பா.ஜ.க-வில் இணைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

2. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க-வுக்கு கொடுக்கபட்டதால், குஷ்புவுக்கு வேறு தொகுதிகளில் சீட் ஒதுக்கப்படாது என்று தகவல் பரவியது. இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க-வில் இருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்த ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க. செல்வம், நிச்சயம் சீட் கொடுக்க வேண்டும் என்று கறார் காட்டியதாக கூறப்பட்டது.

பா.ஜ.க-வில் இணைந்த எம்.எல்.ஏ சரவணன்

தி.மு.க-வில் ஆயிரம் விளக்கு தொகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படலாம் என்ற நிலை இருந்ததால் தான் அவர் பா.ஜ.க-வுக்கு தாவியதாக கூறப்பட்டது, இந்நிலையில் அவருக்கு பா.ஜ.க-வில் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

3. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து பா.ஜ.க மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் களம் இறங்க இருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-candidate-list-for-tn-election-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக