Ad

வெள்ளி, 12 மார்ச், 2021

`நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்' - அ.தி.மு.க தலைமைக்கு எதிராக செய்தித் தொடர்பாளர்கள் போர்க்கொடி?!

''கட்சியில் செய்தித் தொடர்பாளர்களுக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. எங்களை அழைத்துப் பேசி எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை எந்தத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் நாங்கள் கலந்துகொள்ளப்போவதில்லை'' என அதிரடியாக அறிவித்துள்ளனர், அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர்கள். அ.தி.மு.கவில் கோவை செல்வராஜ், பெங்களூர் புகழேந்தி, கோவை சத்யன், மகேஷ்வரி, சிவசங்கரி, சமரசன், ஜவஹர் அலி, குறளார் கோபிநாதன், பாபு முருகவேல், கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள், அ.தி.மு.க தலைமைக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கின்றனர்.

ஜெயலலிதா

அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள்,

''அம்மா உயிரோடு இருக்கும்போது செய்தித் தொடர்பாளர்களை, தலைமைக் கழக நிர்வாகிகளின் பட்டியலில் வைத்திருந்தார். அதேபோல, தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாகவும் வைத்திருந்தார். கட்சியில் பொதுக்குழு, செயற்குழு கூடும்போது எங்களை முன்வரிசையில் அமர வைத்தார். ஆனால், தற்போது எங்களுக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லை. பொதுக்குழு, செயற்குழு கூடும்போது சிறப்பு அழைப்பாளர்களாகத்தான் அழைக்கப்படுகிறோம். தலைமைக் கழகத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டங்களுக்கும் எங்களை அழைப்பதேயில்லை. அதனால், செய்தித் தொடர்பாளர்களாகிய நாங்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவேண்டும். அந்தவகையில், எங்களை தலைமைக் கழக நிர்வாகிகளாக, தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும். அதேபோல, கட்சிப் பதவிகளிலும் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.

Also Read: 'உழைப்புக்கு மதிப்பில்லை' - தி.மு.க-வுக்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

அதேபோல, தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க தொலைக்காட்சி நிறுவனங்களே நேரடியாக கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கொள்ளும் முறையை மாற்றவேண்டும். செய்தித் தொடர்பாளர்களுக்கென ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர் வழியாகத்தான் யார் செல்வது என்பது குறித்து முடிவெடுக்கவேண்டும். மற்ற கட்சிகளில் இதே முறையைத்தான் பின்பற்றி வருகின்றனர்.

அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர்

ஆனால், அ.தி.மு.கவில் மட்டும் அவரவர் இஷ்டத்துக்கு விவாத நிகழ்ச்சிகளுக்குச் செல்கின்றனர். அதனால் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான சிலரை மட்டும் மீண்டும் மீண்டும் நிகச்சிகளுக்கு அழைக்கின்றனர். இது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தக்கூடும். அதேபோல, மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி கட்சியில் புதிதாகச் சேருபவர்களை செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கக் கூடாது. குறைந்தபட்சம் மற்ற செய்தித் தொடர்பாளர்களிடமாவது அதுகுறித்து கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும். கட்சியின், கொள்கை, கோட்பாடு குறித்து எதுவும் தெரியாமல் தங்கள் இஷ்டத்துக்குப் பேசும் போக்கு நீடித்து வருகிறது. அதைத் தடை செய்யவேண்டும்.

மேற்கண்ட எங்களின் கோரிக்கைகள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்துப் பேசாதவரை நாங்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறோம்'' என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, கடந்த பத்தாம் தேதி வெளியான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் இவர்களில் ஒருவருக்குக் கூட வாய்ப்பாளிக்காகத்தே இந்த புறக்கணிப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-spokespersons-battle-against-to-their-chief-leaders-opseps

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக