Ad

சனி, 13 மார்ச், 2021

சீட் கிடைக்காத அதிருப்தி; பாஜக-வில் இணைந்தார் திமுக எம்எல்ஏ சரவணன்

சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியல் மார்ச் 12-ம் தேதி வெளியிடப்பட்டது. 173 இடங்களில் தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது. 61 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானதில் இருந்து, தி.மு.க-வில் சீட் கிடைக்காதவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்து.

பா.ஜ.க-வில் இணைந்த எம்.எல்.ஏ சரவணன்

திருப்பரங்குன்றம் தொகுதியில், தி.மு.க சார்பில் இடைத்தேர்தலி போட்டியிட்டு வென்ற சிட்டிங் எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன், தனக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த தொகுதி கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மருத்துவர் சரவணன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பா.ஜ.க-வில் இணைந்துள்ளார் சரவணன். சென்னையில் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Also Read: திமுக தேர்தல் அறிக்கை: கரைசேர்க்குமா 5-ம், 500-ம்?!

இந்த நிகழ்வின் போது பேசிய எல்.முருகன், ``தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும் புறட்டும் கொண்ட தேர்தல் அறிக்கையாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதியை நிறைவேற்றாமல், கொள்ளை அடிப்பதையே பணியாக செய்து கொண்டிருக்கின்றனர். இது மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கை." என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-mla-sarvanan-joins-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக