கொரோனா வைரஸ் பாதிப்பினால் சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை பாரபட்சமின்றி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நூறுகோடி அமெரிக்க டாலர்கள் வழங்கியது. பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங் ஆஃப் பாகிஸ்தானில் அந்தத் தொகை செலுத்தப்பட்டது. இந்த கடனை திருப்பிச் செலுத்த பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு மார்ச் 12-ம் தேதியோடு முடிவடைகிறது.
ஆனால், கொரோனா ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத பாகிஸ்தான், கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது என்று புரியாமல் நெருக்கடியில் நிற்கிறது.
இன்றைய சூழலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானில் வைக்கப்பட்ட அந்தத் தொகையைத், திருப்பி கொடுப்பது மீண்டும் பாகிஸ்தானைப் பொருளாதார சிக்கலுக்குள் தள்ளும். எனவே காலக்கெடுவை நீட்டிக்கக் கோருவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசைக் குறிப்பாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான்- ஐ தொடர்புகொள்ள முயன்றுவருகின்றனர். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் நூறு கோடி டாலர்கள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்!
உலக வங்கி மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தால், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2019-2020 நிதியாண்டில் 1.9 சதவிகிதத்திலிருந்து 2020 - 21 நிதியாண்டில் -1.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
Also Read: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் ஊரடங்கா? உண்மைநிலை என்ன?!
2021-ம் ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இடையே 500 மில்லியன் டாலர்கள் கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்த கையெழுத்தானது. கடன் நெருக்கடியைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் கடனாக வழங்கச் சர்வதேச நிதி நிறுவனம் 2019 ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/international/uae-demands-pakistan-government-to-payback-usd-1-billion-loan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக