Ad

செவ்வாய், 2 மார்ச், 2021

''என் பெயர் பும்ரா... எனக்கு கல்யாணம்!'' BCCI-க்கு திடீர் லீவ் லெட்டர்... மணப்பெண் யார்?! #Bumrah

இந்தியாவின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நாளை தொடங்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில் இருந்துஇருந்து திடீர் 'லீவ் லெட்டர்' எழுதி விலகியிருக்கிறார்.

27 வயதான பும்ரா, பிசிசிஐ-க்கு எழுதியிருக்கும் கடிதத்தில் ''எனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்காக சில ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் இங்கிலாந்து தொடரில் இருந்து விடுப்பு அளித்து உதவவேண்டும்'' எனத் திருமணம் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அகமதாபாத் டெஸ்ட்டில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த வேலையும் இருக்காது என்பதால் பும்ராவை அணியில் இருந்து உடனடியாக விடுவித்திருக்கிறது பிசிசிஐ.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் முடிந்ததும் மார்ச் 12 முதல் இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் இதே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டி20 போட்டிகளுக்கு அடுத்து புனேவில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. டி20 அணியில் ஏற்கெனவே பும்ரா இடம்பெறாத நிலையில், ஒருநாள் தொடரிலும் அவர் இருக்கமாட்டார் எனத் தெரிகிறது.

அனுபமா பரமேஸ்வரன்

திருமணம் முடிந்து அவர் நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத்தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பும்ரா யாரைத்திருமணம் செய்கிறார், திருமணத் தேதி ஆகியவை மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகையும், 'ப்ரேமம்' படத்தில் நடித்து புகழ்பெற்றவருமான அனுபமா பரமேஸ்வரை பும்ரா காதலிக்கிறார் என செய்திகள் பரவின. இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. இதற்கிடையே பும்ரா இந்திய அணியில் இருந்து லீவ் எடுத்திருக்கும் நிலையில், அனுபமா பரமேஸ்வேரனும் 'Happy Holiday to me' என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட சமூகவலைதளங்களில் இவர்கள் இருவருக்கும்தான் திருமணம் என வாழ்த்து ஸ்டேட்டஸ்கள் குவிகின்றன. ஆனால், இதன் உண்மைத்தன்மை யாருக்கும் தெரியாது.

ஆனால், திருமணத்துக்கு நாமும் ஒரு வாழ்த்துகளை சொல்லிவிடுவோம்... வாழ்த்துகள் பும்ரா!



source https://sports.vikatan.com/cricket/jasprit-bumrah-to-get-married-soon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக