வாழ்வியல் பேசும் ஒரு புத்தகம், 4 லட்சம் பிரதிகளை தாண்டி விற்று பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகளாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. தான் படித்து பயனடைந்து மட்டுமின்றி பரிசளிக்க புத்தகம் என்றாலே மனதில் உதிக்கும் அந்த புத்தகம் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ். சுவாமி சுகபோதானந்தா எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அந்தத் தொடர், பின்னர் புத்தக விற்பனையிலும் கோலோச்சியது. பக்திமார்க்கம் போதிக்கும் ஒரு சமய புத்தகமாக இல்லாமல், சுய சிந்தனையில் தெளிவு ஏற்படுத்தும் வாழ்வியல் புத்தகம் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்'. குடும்ப உறவுகளை வளர்ப்பது தொடங்கி ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் விஷயங்களை குழப்பமின்றி செய்ய உதவும் வழிகாட்டி இது.
ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, ஒடியா என பத்து மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ். அமிதாப் பச்சன், சிரஞ்சிவி என பெரும் பிரபலங்கள் புத்தகங்களை வெளியிட்டனர். அச்சு வடிவம் மட்டுமில்லாது ஆடியோ புத்தகமாகவும் வெளிவந்தது.
பல லட்சம் வாசகர்களை கவர்ந்திழுத்த இந்தப் புத்தகத்தின் பெரும் வெற்றியை தொடர்ந்து மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பார்ட் 2 , பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ், இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் என தொடர்ந்து புத்தகங்கள் வெளியாயின.
இப்போது புதுப்பொலிவுடன், புதிய உலகின் தேவைகள், பிரச்னைகள் குறித்து பேச மீண்டும் வெளியாகிறது மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G . மொபைல் போன், OTT, இணையம், என அதிவேகமாக பயணிக்கிறது உலகம். இளைஞர்களின் சிந்தனை மாற்றத்தை புரிந்து கொண்டு இந்த மில்லெனியல் இளைஞர்களுக்கு எழும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க இருக்கிறது மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G. சமகாலத்தின் சவால்களைப் பேச, இனியும் இனிது என நவீன வடிவமெடுக்கிறது மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G. இன்றைய உலகைப் புரிந்துக் கொண்டு வாழ அனைவர்க்கும் துணை நிற்க இந்தப் புதிய பயணம் தொடங்க இருக்கிறது.
காலம் மாறிவிட்டது அல்லவா? புத்தகங்களை மட்டுமல்ல அதை எழுதிய எழுத்தாளர்களையும் உங்களிடம் கொண்டு சேர்க்க தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.
ஆனந்த விகடன் வலைதளம் வாயிலாக மார்ச் 27-ம் தேதி, சனிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உங்களுடன் உரையாற்ற இருக்கிறார் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! படைத்த சுவாமி சுகபோதானந்தா. உங்களில் ஒருசிலர் அனுப்பும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவிருக்கிறார். உங்கள் கேள்விகளை relax@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.03.2021 மாலை 6 மணிக்குள் அனுப்பி வையுங்கள். அல்லது நிகழ்ச்சி நடக்கும் போது சாட் பாக்சிலும் (chatbox) உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்! - https://bit.ly/2PdLJTR
source https://www.vikatan.com/events/announcements/manase-relax-please-5g-ananda-vikatan-event
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக