பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு வரும் மார்ச் 31-டன் முடிவடைகிறது.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியே கடைசி நாள் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா, லாக்டௌன் எனப் பல பிரச்னைகளால், அதனை இணைப்பதற்கான கெடுவை பல முறை தள்ளி வைத்தது. இந்த நிலையில்தான் வரும் மார்ச் 31 பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 31-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் உங்களுடைய பான் கார்டு பயன்பாட்டில் இல்லை, அதாவது 'Inoperative' என வகைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான பான் கார்டு இல்லாமல் இருப்பது 10,000 ரூபாய்வரை அபராதத்திற்கு வழிவகுக்கும், எனவே, விரைவில் பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணை ஆதாருடன் இணையதளத்தின் மூலமாகவே இணைக்கலாம். 'எப்படி இணைக்க வேண்டும்' மற்றும் 'பான் எண்ணும் ஆதார் எண்ணும் இணைந்திருக்கிறதா' என்பதை அறிந்து கொள்வது எப்படி போன்ற வழிகாட்டுதல்களுக்கு கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
Also Read: ஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
Also Read: மார்ச் 31-க்குள் ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?
source https://www.vikatan.com/government-and-politics/policies/last-date-to-link-pan-and-aadhaar-is-march-31
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக