Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

விஜய் Vs எஸ்.ஏ.சி: சமரசப் பேச்சுவார்த்தையில் இழுபறி... வீட்டில் கட்சி அலுவலகம்!

நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சி-க்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியை பதிவுசெய்ய எஸ்.ஏ.சி. விண்ணப்பித்த விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. எஸ்.ஏ.சி இயக்கிவரும் க்ரைம் திரில்லர் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதற்காக இன்று (நவம்பர் 9) முதல் சில நாள்கள் படப்பிடிப்புக்குச் செல்ல இருக்கிறாராம். அவர் செல்வதற்கு முன்பு, விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர், சூழ்நிலையை அமைதிப்படுத்தும் வகையில் இருவரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 8-ம் தேதி வீடியோகாலில் விஜய்யும், எஸ்.ஏ.சி-யும் பேசியதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் விஜய்

இதுபற்றி விஜய் தரப்பினரிடம் நாம் கேட்டபோது, ``டெல்லியில் புதுக்கட்சியை பதிவு செய்ய கொடுத்த விண்ணப்பத்தை முதலில் எஸ்.ஏ.சி வாபஸ் பெறவேண்டும். மீடியாக்களில் புஸ்ஸி ஆனந்த் பற்றி பேசுவதை உடனே நிறுத்தவேண்டும். அவருடன் இருக்கும் அனைத்து இந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்பியைக் கழட்டிவிடவேண்டும். இவர்தான் அரசியல் ஆலோசனை வழங்கிவருகிறார். கட்சிப் பதிவு விண்ணப்பப் பிரதி மீடியாக்களில் லீக் ஆன விஷயத்தில் நடிகர் விஜய் ரொம்பவே அப்செட். யார் லீக் செய்தது என்பதை விஜய் நேரிடையாக விசாரித்துவிட்டார். விஜய் பெயர் இல்லாமல் அரசியல் கட்சியை எஸ்.ஏ.சி தொடங்குவதில் எங்களுக்கு பிரச்னையும் இல்லை. விஜய் பெயரைப் பயன்படுத்த வேண்டுமானால், சில காலம் பொறுத்திருக்கவேண்டும் என்று பேசியதாகக் கேள்விப்பட்டோம்’’ என்றார்கள்.

Also Read: விஜய் Vs எஸ்.ஏ.சி மோதல்: குடும்பச் சண்டையா... அரசியல் வருகைக்கான முன்னோட்டமா?

அதையடுத்து, எஸ்.ஏ.சி. தரப்பினரிடம் நாம் கேட்டபோது, ``மனுவை வாபஸ் பெறுவது பெரிய விஷயமில்லை. உடனே என்னுடைய கன்டிஷனை விஜய் செய்தால், நான் வாபஸ் வாங்கிவிடலாம். தற்போது மன்றப் பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்தை உடனடியாகத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கவேண்டும். இவர் தரப்பினர்தான், புதுக்கட்சி பதிவு செய்ய கொடுத்த விண்ணப்பத்தை லீக் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.

எஸ்.ஏ.சி

37 மாவட்டத்துக்குத் தலா இருவரை நான் நியமித்திருந்தேன். வேண்டுமென்றே மாவட்டங்களைப் பிரித்து அவரது ஆட்கள் 115 பேரை நியமித்துள்ளார். தேவையில்லாதவர்களை நீக்கவேண்டும். ஆனந்த் பற்றிய புகார் பட்டியல் என்னிடம் இருக்கிது. அதுபற்றி விசாரிக்கவேண்டும். எம்.ஜி.ஆர். நம்பி 30 வருட நண்பர்; அவ்வளவுதான். எனக்கு உதவினார். அவரைக் கண்டு சிலர் பயப்படுகிறார்கள். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று எஸ்.ஏ.சி நினைப்பதாகத் தெரிகிறது’’ என்கிறார்கள்.

Also Read: `என் பெயரையோ, இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை!’ - நடிகர் விஜய்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சி வீட்டின் ஒரு பகுதியைக் கட்சி அலுவலகமாக மாற்றும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. அதேநேரம், ரசிகர் மன்ற அலுவலகத்துக்கு நடிகர் விஜய் வரும் புதன்கிழமை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் வந்தவுடன், அடுத்தகட்ட நிகழ்வுகள் அரங்கேறும் எனத் தெரிகிறது.



source https://www.vikatan.com/news/politics/vijay-vs-sac-controversy-over-political-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக