Ad

செவ்வாய், 24 நவம்பர், 2020

புயல், மழை, வெள்ளம்... வீட்டில் கவனிக்க/பாதுகாக்க வேண்டிய குட்டி, குட்டி விஷயங்கள் என்னென்ன?!

* மழை, புயலில் முதலில் கட் ஆவது மின்சாரம்தான். இதனால் வீட்டில் மொபைல், லேப்டாப் சார்ஜர்கள் முதல் கொண்டு அனைத்து எலெக்ட்ரானிக் கேட்ஜெட்ஸும் சார்ஜ் இல்லாமல் தவிக்கும். இதை முதலில் சார்ஜ் செய்யும் அதே நேரத்தில் வீட்டில் தண்ணீர் மோட்டரை ஆன் செய்து ஓவர்ஹெட் டேங்க்கில் முழுமையான அளவு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சமையல், குளியல் என அனைத்தும் சிக்கல் இல்லாமல் தொடரும்.

* ஒன்றிரண்டு நாட்களுக்கு மின்சாரம் இருக்காது என்பதால் ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் வைக்கப்பட்டிருக்கும் கறி, மீன் உள்பட கெட்டுப்போகக்கூடிய விஷயங்களை வெளியே எடுத்து சமைத்து முடித்துவிடலாம்.

நிவர் புயல்

* கார், பைக்குகளை மரங்களுக்கு அடியில் நிறுத்தவேண்டாம். அதேபோல் கார்கள் வீட்டு காம்பெளன்ட்டுக்கு உள்ளே நிறுத்திவைக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் அருகில் இரும்பு கேட்டுகள் இருப்பின் அவை சரியாக மூடியிருக்கின்றவனா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும். கேட்டுகளில் ஏதும் பிரச்னை இருந்தால் அவற்றை கயிற்றைக் கொண்டு கட்டிவைக்கலாம். கேட்டுகள் புயலால் விழுந்து கார்கள் பாதிப்படையக்கூடும்.

* கடுமையானக் காற்று வீசக்கூடும் என்பதால் வீட்டின் ஜன்னல்கள் நன்றாக மூடப்பட்டிருந்தாலும் கயிறுகளைக்கொண்டு இரண்டு ஜன்னல்களின் கைப்பிடிகளையும் சேர்த்து கட்டிவைக்கலாம்.

* வீட்டின் ஜன்னல்களுக்கு நேராக ஃபிர்ட்ஜ், கண்ணாடி பாத்திரங்கள் எதுவும் இருந்தால் அவற்றை ஜன்னல்களுக்கு அருகில் இருந்து மாற்றிவைக்கவும். வீட்டின் வெளியேவோ அல்லது மாடியிலோ காலி தண்ணீர் கேன் உள்பட பிளாஸ்டிக் பக்கெட்டுகள், குடங்கள் எதுவும் இருப்பின் அவற்றை உள்ளே எடுத்து பத்திரப்படுத்தவும்.

mobile phones

* விமானத்தில் டிக்கெட் புக் செய்துவிட்டாகிவிட்டது, புயலில் இருந்து தப்பிக்க வேறு ஊருக்குப்போகலாம் என எந்தவிதமான பயணமாக இருந்தாலும் இந்த நேரத்தில் முழுமையாகத் தவிர்க்கவும். சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கும் என்பதோடு, வெள்ள நீரில் கார்/பைக் மாட்டிக்கொண்டால் அந்தச் சூழலில் இருந்து வெளிவருவதே சிக்கல் ஆகிவிடும்.

* மழை, புயலுக்குப்பின் கொசுத்தொல்லை அதிகம் இருக்கும். அதனால் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க தேவையான லிக்விடேட்டர், கொசுவர்த்தி சுருள்களை பத்திரப்படுத்திக்கொள்ளவும்.

* வீட்டுப் பத்திரங்கள், சர்ட்டிஃபிகேட்கள் உள்ளிட்டவற்றை மிகவும் பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.



source https://www.vikatan.com/news/environment/nivar-cyclone-pay-attention-to-these-small-things

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக