Ad

சனி, 7 நவம்பர், 2020

வங்கித்துறை முதல் விற்பனைப் பிரிவுவரை... விகடன்-ஈக்விடாஸ் இணைந்து வழங்கும் இலவச வேலைவாய்ப்புமுகாம்!

கொரோனா காலத்தின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது வேலைவாய்ப்பு. வேலைவாய்ப்பு பல இடங்களில் இருந்தும் தேவைப்படும் நபர்களுக்கு அந்த வாய்ப்புப் போய்ச்சேருவதில்லை. இந்தக் குறையை நீக்கும்வண்ணம் ஆனந்த விகடன் ஈக்விடாஸ் டெவெலப்மென்ட்ஸ் இனிஷியேட்டிவ்ஸ் இணைந்து இலவச ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Job vacancy

ஈக்விடாஸ் டெவெலப்மென்ட்ஸ் இனிஷியேட்டிவ்ஸ்

கடந்த 15 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டுவரும் ஈக்விடாஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பை தேவைப்படும் நபர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுவாகக் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும். ஆனால் பட்டப்படிப்பையும் முடிக்காதவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் பெரும்பாலும் தொகுத்துத் தரப்படுவதில்லை ஈக்விடாஸ் அனைவருக்குமான வேலைவாய்ப்பு குறித்த விரிவான பார்வையோடு செயல்படத்தொடங்கியது. இவர்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் வேலைகள் உரிய தகுதியான நபர்களுக்குக் கிடைத்துள்ளன. இந்த வெற்றிக்குக் காரணம் இவர்களின் மாறுபட்ட அணுகுமுறை என்றே சொல்லலாம்.

பொதுவாக வேலை தேடுபவரின் விவரங்களை நிறுவனங்களுக்கு வழங்குவதே வழக்கம். ஆனால் ஈக்விடாஸ், தற்போது ஊழியர்கள் தேவையிருக்கும் நிறுவனங்களைச் சார்ந்த ஹெச். ஆர் (H.R) எண்ணை, வேலை பற்றிய தகவல், சம்பளம் மற்றும் தகுதி ஆகியவற்றோடு வேலை தேடுபவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆர்வமாக வேலை தேடும் நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக மாறிவிட்டது. ஒரு முகாமில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்து மீண்டும் அடுத்த முகாமில் அவர்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களுக்கு வேலை கிடைக்கும்வரை ஃபாலோவ் செய்கிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு பெற்றவர்களின் வெற்றிக்கதை மிகவும் உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது.

job

இந்த முறை ஈக்விடாஸ் நம் ஆனந்த விகடனோடு சேர்ந்து இணையவழி இலவச வேலைவாய்ப்பு முகாமினை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் தேவையிருக்கும் 15 நிறுவனங்களோடு இணைந்து இந்த முகாம நடத்தப்பட உள்ளது. வங்கித்துறையிலிருந்து விற்பனைத் துறைவரை வேலைகள் பலநூறு வேலைவாய்ப்புகள் உள்ளன. நிறுவனங்கள் மற்றும் வேலையின் தன்மை, சம்பளம், தகுதி ஆகியன இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

வாசகர்கள் கவனத்துக்கு...

நீங்கள் வேலை தேடுபவர் என்றால், இந்தமுகாமில் கலந்துகொள்ள கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பில் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள். பின் உங்களுக்குப் பிடித்தமான வேலையைத் தேர்ந்தெடுத்து நீங்களே நேரடியாக அந்தந்த நிறுவனங்களின் ஹெச். ஆர் ருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரடியாகப் பேசலாம்.

உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாருக்கேனும் வேலை தேவைப்படும் என்றால் அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்துச் சொல்லிப் பங்குபெறச் செய்யுங்கள்.

வேலைவாய்ப்பு முகாம்

இந்த முகாமில் கலந்துகொள்ளப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அனைவரும் 21.11.20 அன்று நடைபெறும் இணையவழிக் கூட்டத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

பதிவு செய்யக் கடைசித் தேதி : 20.11.20



source https://www.vikatan.com/news/career/vikatan-and-equitas-jointly-present-online-job-fair

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக