Ad

திங்கள், 23 நவம்பர், 2020

சென்னை: 3 பேர் கொலை - துப்பாக்கி கொடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி!

சென்னை சௌகார்பேட்டை விநாய மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர் தலில் சந்த் (74). ஃபைனான்ஸியர். இவரின் மனைவி புஷ்பா பாய் (68). இவர்களின் மகன் சீத்தல் கமார் (40). இவர்கள் மூன்று பேரும் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தலில் சந்த்தின் மகள் பிங்கி அளித்த புகாரின்பேரில், யானைக்கவுனி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொலை செய்யப்பட்ட ஃபைனான்ஸ் அதிபர், மனைவி, மகன்

தனிப்படை போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சீத்தல் குமாரின் மனைவியான புனேவைச் சேர்ந்த ஜெயமாலா மற்றும் அவரின் சகோதரர்கள் கைலாஷ் (32), விலாஷ், கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), விஜய் உத்தம் கமல் (28) ராஜூ ஷிண்டே ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களில் கைலாஷ், ரவீந்தரநாத் கர், விஜய் உத்தம் கமல் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Also Read: சென்னை: 3 பேர் சுட்டுக் கொலையில் மருமகள் எங்கே? - புனேவில் நடந்த கார் சேஸிங்

கைதானவர்களிடம் விசாரித்தபோது கொலைக்குப் பயன்படுத்தியது லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி எனத் தெரிந்தது. இதையடுத்து அந்த துப்பாக்கி குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் துபேவுக்குச் சொந்தமானது தெரிந்தது. மேலும், கொலைக்கு பயன்படுத்திய கார், முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் துபே மனைவியின் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார், ராஜீவ் துபே, அவரின் மனைவியை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.

மருமகள் ஜெயமாலா

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் துபேவும் ஜெயமாலாவின் சகோதரர் விலாஷும் நண்பர்கள். விலாஷ், வழக்கறிஞராக இருப்பதால் ராஜீவ் துபேவின் துப்பாக்கி, காரை வாங்கிக் கொண்டு சென்னை வந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனால்தான் ராஜுவ் துபேவிடம் போலீஸார் விசாரித்து வருகிறோம். அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் ராஜீவ் துபே மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயமாலா, அவரின் சகோதரர் விலாஷ், ராஜூ ஷிண்டே ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-secured-ex-military-officer-in-triple-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக