Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

``நான்லாம் ஒண்ணுமே இல்லை சார்!" - எஸ்.பி.பி... சுவாரஸ்ய தகவல்கள்

* காதல் வழியப் பாடுவதில் வல்லவரான எஸ்.பி.பி காதல் திருமணம் செய்தவர். இளம் வயதிலேயே காதலித்து வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், தனது காதலி சாவித்திரியை விசாகப்பட்டினத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

* "பருத்த சரீரத்தோடு நான் எப்படி 'மண்ணில் இந்தக் காதலன்றி' பாடலை மூச்சு விடாமல் பாடினேன்னு ஆச்சர்யப்படுறவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். அது ஜிம்மிக்ஸ்தான். டெக்னாலஜியினால, ராஜாவின் மேதமையினால அது சாத்தியமாச்சு. ஆனாலும், அதுக்கு முன்பே, ஆறிலிருந்து அறுபதுவரை 'கண்மணியே காதல் என்பது கற்பனையோ' பாடலில் தம் கட்டிப் பாடியிருக்கேன்!" என்று ரகசியம் பகிர்ந்தவர் பாலு.

‘பாடும் நிலா’ எஸ்.பி.பி

* அடிக்கடி சொல்லும் வாக்கியம் சுவாமி விவேகானந்தரின் 'Every soul is potentially divine!' (ஒவ்வொரு ஆன்மாவும் தெய்விகமானது). அது அவரது மனசுக்கு மிகவும் நெருக்கமானது.

* தன் ரசிகர்களை வைத்து நலிந்த மேடைப்பாடகர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்துக்காகவும் டிரஸ்ட் ஆரம்பித்து சத்தமில்லாமல் பலருக்கு உதவி வந்தார்.

* நடிப்புத்திறமையைப் பார்த்து 'முதல் மரியாதை' படத்தில் பாரதிராஜா நடிக்க அழைக்க, அன்போடு தவிர்த்திருக்கிறார் பாலு.

* எஸ்.பி.பியை எல்லோருக்கும் பிடிக்கக் காரணமே அவரின் எளிமைதான். 40 ஆயிரத்துக்கும் மேலான பாடல்கள், கின்னஸ் சாதனை, 6 தேசிய விருது உட்பட ஆயிரக்கணக்கான விருதுகள்... ஆனாலும், எதிரில் இருப்பவர்களை வியந்து பார்த்து, "நான்லாம் ஒண்ணுமே இல்லை சார்!" என்றே பேச ஆரம்பிப்பார்.

* பாடும்போது மெல்லிசாய் சிரிப்பது, குரலில் சேட்டை பண்ணுவதெல்லாம் எஸ்.பி.பி ஸ்டைல். இளையராஜா இசையில் இதை விளையாட்டாகச் செய்ய, அவரும் அதை ஆமோதிக்க அதை அளவோடு வழக்கமாக்கிக்கொண்டார்!

* ஆரம்பப் போராட்டக் காலங்களில் எஸ்.பி.பியிடம் நிறைய மனம்விட்டுப் பேசியிருக்கிறார் அஜித். எஸ்.பி.பி. சரணின் கிளாஸ்மேட். அமராவதியில் 4 ஹிட் பாடல்களில் நல்ல ஓப்பனிங் கொடுத்ததிலாகட்டும், 2 தெலுங்குப் படங்களில் அஜித் பெயரைப் பரிந்துரை செய்ததாகட்டும் பாலு காட்டிய அன்பை அஜித் எப்போதும் நினைவுகூர்வார். 'He is my Philosopher' என்று சொல்லும் அஜித், அவரை 'குரு' என்றுதான் அழைப்பாராம். கார்களைப் பற்றி அஜித்திடம் ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வாராம் பாலு!

எஸ்.பி.பி - இளையராஜா

* இளையராஜாவை இன்றும் 'வாடா போடா' என அழைக்கும் இருவரில் ஒருவர் பாரதிராஜா. மற்றொருவர் பாலு. 'சீக்கிரம் எழுந்து வா பாலு... உனக்காகக் காத்திருக்கேன்!' என்ற இளையராஜாவின் குரலில் தெரிந்தது நடுக்கமல்ல... பாலு ராஜாமீது வைத்திருந்த அன்பின் அலைவரிசை அது!

* தன் குரலில் பேசும் ஆட்டோ காலர் டியூனாக செல்போன் சேவையில் இணைத்து வைத்திருந்தார் பாலு. அவரால் போனை எடுக்க முடியாவிட்டால் அவர் குரல் ஸாரி சொல்லி காத்திருக்கச் சொல்லும். பிறகு லைனில் வருவார். இப்போது உலகமே காத்துக்கொண்டிருக்கிறது!

- இவை சாம்பிள்கள் மட்டுமே. கே.வி.மகாதேவன் இசையில் தமிழில் அறிமுகமாகி, நேற்றுவந்த புது இசையமைப்பாளர் வரை பாடியவர், 40 ஆயிரம் பாடல்கள், 55 ஆண்டுக்கால இசைப்பயணத்தில் பாடி ஒரு இசை சகாப்தமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். 74 வயதில் தன் குரலை நம்மிடையே விட்டுவிட்டுப் பறந்துபோன பாட்டுக்குயில் குறித்த 74 சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் காண > இளைய நிலா நினைவலைகள்! https://bit.ly/36hqR4u

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://cinema.vikatan.com/music/evergreen-memories-of-legendary-singer-sp-balasubrahmanyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக