Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

மன் கி பாத்: `சலூனில் நூலகம்; உங்களுக்கு பிடித்த நூல்?’ - தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுகிழமையன்று `மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார்.

அதன்படி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் காலை 11 மணி அளவில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட பிரதமர், கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிக எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடி

பண்டிகை கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்நாட்டு பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும். உள்நாட்டு பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்” என்றார்.

பிரதமர் மோடி

முன்னதாக பிரதமர் மோடி தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் பொன் மாரியப்பன் என்பவர் குறித்து பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் முடித்திருத்தும் நிலையம் நடத்தி வரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருக்கிறார். மேலும் மோடி, பொன் மாரியப்பனிடம் பேசுகையில். `வணக்கம் நல்லா இருக்கிறீங்களா?’ என தமிழில் பேசினார். நூலகம் நடத்தும் யோசனை வந்தது குறித்தும் பிடித்த நூல் குறித்தும் கேள்விகள் கேட்டார். தனக்கு பிடித்த நூல் திருக்குறள் என்று மாரியப்பன் தெரிவித்தார்.

Also Read: `ரசிக்கவைக்கும் வில்லுப்பாட்டு; கதைசொல்லி வித்யா!' - `மன்-கி-பாத்' உரையில் பிரதமர் மோடி



source https://www.vikatan.com/news/general-news/pm-modi-talks-with-tamilnadu-saloon-shop-owner-about-his-idea-of-setting-library-in-his-shop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக