Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

`தேர்தல் நேரத்தில் கூட்டணி உடையலாம்!’ - துரைமுருகன் சூசகம்

வேலூர் காட்பாடியில், தி.மு.க பொதுச்செயலாளரும் அந்த தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன் தலைமையில் இன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துரைமுருகன், ``நாங்கள் நடத்தியது போட்டி கிராம சபை இல்லை. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாங்கள் ஏற்கெனவே தயாராக இருந்தோம். அவங்க திடீர்னு கேன்சல் பண்ணிட்டாங்க. இவ்ளோ பெரிய காந்தி பிறந்தநாளில் நடக்கக்கூடிய கிராம சபையை ராத்திரி 9, 10 மணிக்கு மேல் எதுக்காக கேன்சல் பண்ணனும்?

துரைமுருகன்

நாங்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் சொன்னோம். அவங்க என்னடானா, கொரோனா தொற்று அதிகமாகிடும்னு காரணம் சொல்லி கிராம சபையை நடத்தக்கூடாதுனு முடிவு பண்ணிட்டாங்க. முந்தைய நாள் தெரியாதா? நேத்தைக்கு முழுக்க அமைதியா இருந்துட்டு நைட் ரத்துனு அறிவிக்கிறாங்க. ஒரே நாடு, ஒரே ரேஷன் கடை, ஒரே பூமி, ஒரே மொழி, ஒரே அரசாங்கம் என்கிற இவையெல்லாம் ஜனநாயகத்தை அடியோடு பெயர்த்து எரிகின்ற காரியமாகக் கருதுகிறேன்.

Also Read: வேலூர்: `சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறை!’ -துரைமுருகன் ஆதரவாளர்கள் கலக்கம்

எந்த நாயகமாக இருந்தாலும், மக்களுக்கு நல்லதுபோய் சேரணும். அப்படி நல்லது கிடைக்கலைனா, ஜனநாயகமாக இருந்தாலும் சர்வாதிகாரமாக இருந்தாலும் பிரயோஜனம் இல்லை’’ என்றவரிடம் ``பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி மீது உத்தரப்பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

துரைமுருகன்

அதற்கு துரைமுருகன், ``எங்களை மாதிரியான சின்ன ஆள் மேலயே வழக்கு போடும்போது, ராகுல்காந்தி மாதிரியான பெரிய ஆள் மேல வழக்குப் போடாம இருப்பாங்களா? எத்தனை வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம். தேர்தல் காலத்தில், `சீட்’ பத்தல, கேட்ட தொகுதி கிடைக்கல போன்ற காரணங்களால் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே போகலாம். வேறு கூட்டணியில் உள்ள கட்சிகளும் எங்களுடன் வந்து சேருவார்கள்’’ என்றார். கூட்டணி தொடர்பான இந்த கருத்தில், துரைமுருகன் பொடி வைத்து பேசியிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/dmk-gs-duraimurugan-speaks-about-alliance

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக