Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

நிர்மலா சீதாராமன் அறிவித்த விடுமுறை பயணச் சலுகை... யாருக்கு லாபம்?

சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான கே.ஆர்.சத்தியராயணன், இது குறித்து விரிவாக விளக்கிச் சொன்னார்.

``எல்.டி.சி சலுகை என்பது நான்கு ஆண்டுகளைக் கால வரம்பாகக் கொண்டது. அதாவது, இந்த நான்கு ஆண்டுக்குள் இரண்டு முறை ஒருவர் சுற்றுலா செல்வது மூலம் அவர் பெற்ற விடுமுறை பயணத் தொகையைச் செலவிட்டு, அதற்கான பயண ஆதாரத்தைக் கொடுத்தால் இந்தத் தொகைக்கு வரி பிடிப்பது தவிர்க்கப்படும்.

Travel

2018 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான நான்கு ஆண்டுகளில் கடைசி நிதியாண்டான 2020-ல் சுற்றுலா பயணம் மேற்கொண்டு எல்.டி.சி வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம் என திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு ஊழியர் இந்தச் சலுகையைப் பெற முடியும். ஒருவர் அவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்ச படியில் 10 நாள் சம்பளம் எல்.டி.சி ஆகக் கொடுக்கப்படும். இந்தப் பணத்தைக் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயணம் மேற்கொண்டு அதற்கான பயணச் செலவு ஆதாரத்தைக் கொடுத்தால், அந்தத் தொகைக்கு வரி பிடிக்க மாட்டார்கள்.

அரசு ஊழியரின் பதவிக்கு ஏற்ப விமானத்தில் பிசினஸ் கிளாஸ் (ரூ.36,000), எக்னாமிக் கிளாஸ் (ரூ.20,000), ரயில் (ரூ.6,000) ஆகியவற்றில் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம்

உதாரணத்துக்கு ஒருவருக்கு எல்.டி.ஏ ரூ. 39,000 கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விமானத்தில் எக்னாமிக் கிளாஸில் பயணம் மேற்கொள்கிறார்கள். இதற்கான பயணச் செலவு ரூ.80,000. (இந்தப் பயணச் செலவும் எல்.டி.ஏ உடன் சேர்ந்தது. இதற்கும் வரிச் சலுகை உண்டு) இதன் மூன்று மடங்கு ரூ.2,40,000 மற்றும் எல்.டி.ஏ ரூ.39,000... ஆக மொத்தம் ரூ.2,79,000-க்கு இப்போது பொருள்கள் வாங்கினால் அல்லது ஏதாவது சேவை பயன்படுத்தினால், வரி கட்ட வேண்டிருக்காது.

எல்.டி.ஏ 100% ரூ.39,000 மற்றும் போக்குவரத்து செலவில் 50% அதாவது ரூ.40,000 ஆக மொத்தம் ரூ. 79,000 முன்பணமாகக் கிடைக்கும். மீதியுள்ள ரூ.2 லட்சத்தைக் கையிலிருந்து செலவு செய்தால், மீதியுள்ள ரூ.40,000 கிடைக்கும். கையில் கூடுதலாக ரொக்கப் பணம் இருந்தால் மட்டுமே, இந்தச் சலுகையைப் பெற முடியும். இப்போது இந்தச் சலுகையைப் பயணம் செல்லாமல், அதற்குப் பதிலாக வேறேதும் பொருள்கள் வாங்கிவிட்டு கூட, அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆடிட்டர் கே. ஆர். சத்தியராயணன்

நிபந்தனைகள்

1. வாங்கப்படுகிற அல்லது பெறும் சேவைக்கு ஜி.எஸ்.டி வரி 12% மற்றும் மேல் இருக்க வேண்டும். (தங்க நகை வாங்க முடியாது. காரணம் அதற்கு ஜி.எஸ்.டி 3%தான்)

2. வாங்கும் பொருள், சேவைக்கு (டேர்ம் இன்ஷூரன்ஸ், யூலிப் பாலிசி பிரீமியம் போன்றவை) டிஜிட்டல் முறையில்தான் பணம் செலுத்த வேண்டும்.

3. இந்தச் சலுகை 31.03.2021 வரைதான்.

4. ஜி.எஸ்.டி கட்டியதற்கான இன்வாய்ஸ் மற்றும் பொருள்கள் வாங்கியதற்கான ரசீதை இணைத்து கொடுக்க வேண்டும்.

ஒருவர் ரூ.2,79,000 செலவு செய்ய வேண்டிய நிலையில் ரூ.2,00,000-தான் செலவு செய்திருக்கிறார் என்றால், அவருக்கு ரூ.39,000–ல் ரூ.27,960தான் கிடைக்கும். இது விடுமுறை சம்பளம் என்பதால் அவரின் வரி வரம்புக்கு ஏற்றார் போல் வரி விதிக்கப்படும். ரூ.2,40,000 –ல் ரூ. 57,340 தான் கிடைக்கும். இந்தத் தொகை, விடுமுறை பயணச் சலுகையில் வருவதால் இதற்கு வரிச் சலுகை கிடைக்கும். ஆக மொத்தம் எல்.டி.சி வரிச்சலுகை ரூ.85,300தான் கிடைக்கும். ரூ.2,79,000 அந்த ஊழியருக்கு அளிக்கப்பட்டிருந்தால், ரூ.85,300 மட்டும் கழிக்கப்பட்டு மீதி உள்ள தொகை அடுத்து வரும் மாதங்களில் சம்பளத்தில் பிடிக்கப்படும்.

Shopping

எனவே, என்ன பொருள் வாங்கப் போகிறீர்கள், எவ்வளவு செலவிடப் போகிறீர்கள், அதிகபட்சம் எவ்வளவு தொகை செலவிட வேண்டும் என்பதை எல்லாம் சரியாக கணக்கிட்டு, அதன் பிறகு செயல்படுவது நல்லது” என்றார்.

மத்திய அரசு, இந்தச் சலுகை மூலம் பலரும் மொபைல் போன், லேப் டாப், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டார் சைக்கிள், கார் போன்றவை அதிகமாக விற்பனையாகும்; இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறது.



source https://www.vikatan.com/business/news/explainer-on-ltc-cash-voucher-scheme-which-announced-by-nirmala-sitharaman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக