Ad

சனி, 24 அக்டோபர், 2020

பஞ்சாப்: `அவர்கள் மனசாட்சியை இந்த கொடூரம் கொஞ்சம் கூட அசைத்து பார்க்கவில்லை?!’ - நிர்மலா சீதாராமன்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் போது கைது செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது.

ஹத்ராஸ் - ராகுல், பிரியங்கா காந்தி

இந்த நிலையில் பீகாரை சேர்ந்த 6 வயது சிறுமி, பஞ்சாப்பில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதுடன் கொடூரமாக் கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பீகாரில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக பஞ்சாப் வந்திருக்கிறார்கள். அங்கு தான் இந்த கொடூரம் நடந்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பீகாரை சேர்ந்த 6 வயது பட்டியலின சிறுமி ஒருவர், பஞ்சாப் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், கொலை செய்யப்பட்டு கொடூரமாக எரிக்கப்பட்டிருக்கிறார். மற்ற இடங்களில் எல்லாம் அரசியலில் தங்களுக்கு உதவும் என்பதற்காக ஓடி ஓடி சென்ற சகோதரர், சகோதரியின் மனசாட்சியை இந்த கொடூரம் கொஞ்சம் கூட அசைத்து பார்க்க வில்லை.

எந்த வகையிலும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரசியலாக்கப்பட கூடாது. ஆனால் சிலர் தங்களின் அரசியல் விளையாட்டை விளையாடுவதற்காக, குறிப்பிட்ட மாநிலங்களில் நடக்கும் கொடுமைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள். அதுவே அவர்களின் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலத்தில் நடந்தால் அமைதியாகி விடுகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், ``இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ராகுல் காந்தி தற்போது வரை ஒரு ட்வீட் கூட போடவில்லை. இந்த விவகாரத்தில் எந்த சீற்றமும் இல்லை. பாதிப்பு நடந்த இடத்துக்கு சுற்றுப்பயணமும் செல்லவில்லை. ஒரு பெண் தலைமை தாங்கும் கட்சி, இப்படியான குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தனது சீற்றத்தை வெளிப்படுத்துகிறது” என்றார் காட்டமாக.

Also Read: ஹத்ராஸ்: `உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால்..?' - அதிகாரிகளைச் சாடிய நீதிபதிகள்



source https://www.vikatan.com/news/politics/nirmala-sitharaman-attacks-rahul-and-congress-members-for-politicizing-rape

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக