Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

``50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே!''- தியேட்டர் திறப்பு வழிமுறைகள் என்ன?!

அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது, திரையரங்குகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
திரையரங்கு | Theatres

"50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்கலாம் என மத்திய அரசு இப்போது அனுமதித்துள்ளது. தியேட்டர்களில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு ஒருவர் அமர மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்தபடியேதான் படம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் கிருமிநாசினி கொண்டு திரையரங்கை சுத்தப்படுத்த வேண்டும். பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட திண்பண்டங்களை மட்டுமே தியேட்டர்களில் விற்பனை செய்ய வேண்டும். 24 முதல் 30 டிகிரி அளவில்தான் ஏசியை இயக்க வேண்டும். ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை இடைவேளையின் போது ஒளிபரப்ப வேண்டும்" எனப் பல விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

Also Read: ரஜினிக்குத் தனி விமானம்... அக்டோபர் 8 முதல் `அண்ணாத்த' ஷூட்டிங்?! #VikatanExclusive

மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், அந்தந்த மாநில அரசுகள்தான் தங்கள் மாநிலத்தின் நிலை என்ன, எப்போது திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்கலாம் என்பதை அறிவிக்கும். அந்த வகையில், தமிழ்நாட்டை பொருத்தவரை, 'தியேட்டர்கள் திறப்பது குறித்து சீக்கிரம் நல்ல செய்தி வரும்' என்பதை மட்டும்தான், அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/central-government-announced-theatre-reopening-rules

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக