அவர்களுக்கு உதவும் விதமாக, கல்வித்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, 700-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளை நடத்தி வரும் சின்மயா மிஷன் அமைப்பினால், கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் “சின்மயா அகாடமி ஃபார் சிவில் சர்வீசஸ் ( Chinmaya Academy for Civil Servicess)".
இவர்கள் சென்னை அண்ணா நகரில் தங்கள் பயிற்சி மையத்தை அமைத்து, IAS தேர்வினை எழுத இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்து வருகிறார்கள்.
தேர்வில் வெற்றி பெறுவதே இலக்கு!
முற்றிலும் ஆன்லைன் யுகமாக மாறி விட்ட இந்தக் காலகட்டத்தில், நாம் ஏன் ஒரு பயிற்சி மையத்தைத் தேடிச்சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு எழலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. ஆன்லைன் வாயிலாக கற்கும் பொழுது, நாம் வெறும் தகவல்களை மட்டும்தான் பெற முடியும். ஆனால் நாம் செல்ல நினைக்கும் பாதையில், நமக்கு முன்பே பயணித்த தேர்ந்த ஆசிரியர்களிடம் நேரில் பயிலும்போது, அவர்களின் செறிவான அனுபவங்களும், முறையான வழிகாட்டுதலும் நம்மை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும்.
எனவேதான், சின்மயா அகாடமி, UPSC தேர்விற்கான பயிற்சியில், நன்கு தேர்ந்த, பல வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, மாணவர்களைத் தேர்வில் வெற்றி பெறவைக்கும் நோக்குடன் பயிற்சியளித்து வருகிறது.
மேலும், பல துறைகளில் நிபுணத்துவம் பெற்று, தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வருபவர்களையும் அழைத்து வந்து, தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் படிப்பு சார்ந்த தகவல்கள் மட்டுமின்றி, தேர்வினைப் பற்றிய புரிதல், எழுத்துக்களைத் தாண்டிய யதார்த்த பார்வை, தேர்வினை எதிர்கொள்வதற்கான வழிகள், மேலும் தங்கள் கனவுகளை அடைவதற்கான திட்டம் என பல்வேறு விஷயங்களைக் கற்றுத் தேர்கிறார்கள்.
அதே சமயம் நேரமின்மை காரணமாக வேலை பார்த்துக் கொண்டே படிப்பவர்களுக்கு வார இறுதி வகுப்புகளும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளும் சின்மயா அகாடமியில் உண்டு.
UPSC -யில் மதிப்பெண்ணே பிரதானம்!
சிவில் சர்வீஸில் மொத்தம் 54 துறைகள் இருக்கின்றன. இதில் ஒரு மாணவர் எந்தத் துறைக்குள் காலடி எடுத்து வைக்க விரும்பினாலும், அதற்கு UPSC தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணே அடிப்படை தகுதி. அதற்கு வழிவகை செய்யும் விதமாகவே, சின்மயா அகாடமி தங்கள் மாணவர்களுக்கு,
-
தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகள்
-
மேம்படுத்தப்பட்ட ஆய்வு புத்தகங்கள்
-
இனசரி பாடம், பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள்
-
சந்தேகங்களை தீர்க்கும் செஷன்கள்
-
தனிப்பட்ட கவனம்
-
எழுத்து பயிற்சி
-
நேர்முக தேர்வுக்கான பயிற்சி
என பல்வேறு முறைகளில் பயிற்சியளிக்கிறார்கள். இதனால் மாணவர்கள், தங்கள் நிறை குறைகளைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து கொள்ளவும், அறிவுத்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், போதிய ஒழுக்கமும் தன்னம்பிக்கையும் கொண்டு தேர்வினை எதிர்கொள்ளவும் முடிகிறது.
முயற்சியே மூலதனம்...
“முடியும் என்றால் முயற்சி செய், முடியாது என்றால் பயிற்சி செய்" என்பது பழமொழி. அதற்கேற்ப, நீங்களும் சிவில் சர்வீஸ் தேர்வினை எதிர்கொள்ள இருந்தால், சின்மயா அகாடமியில் சேர்ந்து, தேர்ந்த பயிற்சியுடன் உங்கள் கனவுகளை சென்றடையலாம்!
For More details: https://admissions.chinmayaias.com/vikatan
source https://www.vikatan.com/sponsored/sponsor-content/guide-for-ias-exams-chinmaya-academy-for-civil-servicess
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக