Ad

புதன், 7 ஜூன், 2023

தென்னந்தோப்பில் எரித்துக் கொலைசெய்யப்பட்ட முதியவர்; இடப்பிரச்னை காரணமா? - போலீஸார் விசாரணை!

கரூர் மாவட்டம், மாயனூரை அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது: 72). விவசாயியான இவருக்குச் சொந்தமாக நிலம், தென்னந்தோப்பு ஆகியவை இருக்கின்றன. இந்த நிலையில், இன்று காலை தோட்டத்துக்குத் தண்ணீர் விடுவதாக தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு கருப்பண்ணன் வயலுக்குச் சென்றிருகிறார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வராத நிலையில், கருப்பண்ணனைத் தேடி அவரின் உறவினர்கள் தென்னந்தோப்புக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு சென்று பார்த்தபோது முதியவர் கருப்பண்ணன் எரிந்து கரிக்கட்டையான நிலையில் சடலமாகக் கிடந்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியான கருப்பண்ணனின் உறவினர்கள், இது குறித்து மாயனூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், விசாரணை நடத்தினர். கொலைசெய்யப்பட்ட கருப்பண்ணனுக்கும், அவருடைய உறவினருக்கும் இடப்பிரச்னை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கரூர்

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இடப்பிரச்னை சம்பந்தமாகதான் கருப்பண்ணன் கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியவந்திருக்கிறது. இதற்கிடையில், "கொலைசெய்தவர்களைக் கைதுசெய்யும் வரையும் கருண்ணன் உடலை அடக்கம் செய்யமாட்டோம்" என்று கூறி அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மரணம்

``கொலையாளிகளை விரைவில் கைதுசெய்கிறோம்" என்று காவல்துறையினர் கருப்பண்ணன் உறவினர்களைச் சமாதானம் செய்ததோடு, கருப்பண்ணனைக் கொன்றவர்களைப் பிடிக்க தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் ஒருவர் தனது தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/elder-man-found-dead-in-farm-police-investigation-goes-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக