திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். அப்போது அவர், ``தமிழகத்துக்கு ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று. அந்தப் பதவியை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன நினைக்கிறாரோ அதை நாம் பேச வேண்டும் என்று கருதுகிறார். ஆனால், அதற்கான ஆள் நாங்கள் இல்லை. தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதை அவர் விரைவில் உணருவார்.
ஓர் அமைச்சர் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முதல்வர் மட்டும்தான் முடிவுசெய்வார். ஆளுநர் இதில் தலையிட முடியாது. தேவையற்ற காரணங்களைக் கூறி தி.மு.க ஆட்சிமீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுநர் ரவி முயல்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைக் காட்டிலும், யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து செங்கோலை எடுத்துச் சென்றால், கோலோச்சி விடமுடியும் என சிலர் நினைக்கிறார்கள். அது பகல் கனவாக இருக்கும்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-kanimozhi-mp-slams-governor-rn-ravi-at-tiruppur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக