Ad

புதன், 14 ஜூன், 2023

ஒன ப ட: மநலஙகளகக தனதத பணபட அடயளம இலல எனற ஆளநர ஆர.என.ரவயன கரதத?

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலர், தி.மு.க

`` `வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான் இந்தியாவின் முகம். கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் நாங்கள், இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகிறோம். ஆனால், அதற்கு நேர் எதிராக, ‘மாநிலங்களுக்கென தனித்த பண்பாடோ, அடையாளமோ இல்லை’ எனப் பேசித் திரிகிறார் ஆளுநர் ரவி. ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்கிற ஆர்.எஸ்.எஸ் நாக்பூர், சாவர்க்கர் கும்பலின் சித்தாந்தத்தை வலியுறுத்துவதைத் தான் தன் முழுநேர வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார் ரவி. தமிழர்களுடைய பண்பாடு, வாழ்வியல் நெறி, ஆகியவை 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. தமிழர்களின் பண்பாடுதான் உலகின் தொன்மையான பண்பாடு; தமிழர்களின் கலாசாரம்தான் உலகத்தின் ஆகச்சிறந்த கலாசாரம். இந்த பண்பாட்டையும் கலாசாரத்தையும் இவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் ஆளுநர் என்கிற போர்வையில் இருக்கிற ‘ஆர்.எஸ்.எஸ்’ ரவி, தங்கள் அறிவிலித்தனத்தையும் அஜண்டாவையும் உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்.’’

தமிழன் பிரசன்னா, ஏ.பி.முருகானந்தம்

ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க

`` ‘அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்ததுதான் இந்தியா; அனைத்து மாநிலங்களின் தனித்துவத்தையும் உள்ளடக்கியதே இந்தியாவின் தனித்துவம்’ என்பதுதான் ஆளுநர் தெரிவித்த கருத்தின் சாராம்சம். ஆனால், ஆளுநரின் கருத்தைத் தவறாகச் சித்திரிப்பதையும், ஆளுநரின் கருத்துகளைப் பேசுபொருளாக்குவதையும் தமிழக அரசின் தோல்விகளை மறைப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுத்துகிறது தி.மு.க. ‘ஒரே நாடு’ என்ற கோட்பாட்டுக்கு எதிராகத் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்கும் எண்ணம் கொண்டவர்கள் தி.மு.க-வினர். இவர்கள் பண்பாடு, கலாசாரம் குறித்துப் பேசலாமா... கள்ளச்சாராயச் சாவுகள், டாஸ்மாக் முறைகேடுகளால் ஏற்பட்டிருக்கும் பல்வேறு சிக்கல்கள், தந்தை மது அருந்துவதாகக் கூறி சிறுமி ஒருவர் தற்கொலை என நாடே மதுப் பிரச்னைகளால் தள்ளாடிவருகிறது. இந்த நிலையில், இது போன்ற சம்பவங்களையெல்லாம் திசைதிருப்ப வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு ஆளுநர் விவகாரத்தை வைத்து அநாகரிக அரசியல் செய்கிறார்கள் தி.மு.க-வினர்!’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-rn-ravi-comments-about-states

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக