Ad

திங்கள், 19 ஜூன், 2023

நரககட: பறயளர பணயலரநத வடவதத ஆடசயர - பரடடததல கததத அரசததற அலவலரகள!

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் அரசு திட்டப்பணிகளில் தாமதமாக மேற்கொள்ளப்படுவதாகவும், பணிகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து நரிக்குடி யூனியனில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது யூனியன் திட்ட பொறியாளர் ஃபெரோஸ்கான் அங்கு இல்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொறியாளர் ஃபெரோஸ்கானை பணியிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடியாக உத்தரவிட்டார்.

மறியல்

மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவு அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. பொறியாளர் ஃபெரோஸ்கானை பணியிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் அவற்றில் உடன்பாடு எட்டப்படாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கிராம ஊராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அரசு அலுவலர்களின் போராட்டத்தை அறிந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது.

ஆட்சியரின் இந்த பதிலில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அரசு அலுவலர்கள் தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்து மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து அரசுத்துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட அரசுத்துறை அதிகாரிகளை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

கைது

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கிராம ஊராட்சி அலுவலர்கள் சங்கத்தினர், "எதேச்சதிகார போக்குடன் செயல்படும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் அடுத்தக்கட்டமாக மாநில அளவில் போராட்டத்தை விரிவுபடுத்த போகிறோம். கிராம ஊராட்சி அலுவலகங்களை பூட்டி சாவி ஒப்படைக்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என எச்சரிக்கை விடுத்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/narikudi-union-engineer-has-relieved-from-his-duty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக