Ad

ஞாயிறு, 14 மே, 2023

Doctor Vikatan: தேங்காயையும் தேங்காய் எண்ணெயையும் தினசரி சேர்த்துக் கொள்ளலாமா?

Doctor Vikatan: தேங்காயை தினசரி உணவில் எல்லோருமே சேர்த்துக் கொள்ளலாமா? என்ன அளவில் சேர்க்க வேண்டும்? வாரம் ஒரு மீடியம் சைஸ் தேங்காய் மற்றும் சமையலில் தினம் ஓரிரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சரிதானா?

-Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

தேங்காய் எண்ணெயில் 'மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு' என ஒன்று இருக்கிறது. அது உடலுக்கு, குறிப்பாக மூளைக்கு மிகவும் அவசியம். தேங்காயிலும் தேங்காய் எண்ணெயிலும் மருத்துவ குணங்கள் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை சமையலில் பயன்படுத்தினார்கள்.

தேங்காயோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்துக்கொண்டால் உடலில் கொலஸ்ட்ரால் சேரும், கெட்ட கொழுப்பு சேரும் என்றெல்லாம் பிரசாரங்கள் செய்யப்பட்டதால் பலரும் பயந்து, தேங்காய் உபயோகத்தையே தவிர்க்கத் தொடங்கினர்.

அதேநேரம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்பவே தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்க வேண்டும். அந்த வகையில் தினமும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லோருக்கும் கொழுப்புச்சத்து என்பது அவசியம்.

எனவே மற்ற கொழுப்புச்சத்துகளைத் தவிர்த்துவிட்டு, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வெண்ணெயில் உள்ளது போல தேங்காய் எண்ணெயில் உள்ளது கெட்ட கொழுப்பு அல்ல.

Coconut

ஃப்ரெஷ் தேங்காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது. அது குடலுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அந்த வகையில் தேங்காய் நல்லது. குடல் புற்றுநோய் வராமலும் காக்கும். நான்குபேர் கொண்ட குடும்பத்தில் வாரத்துக்கு இரண்டு தேங்காய் (மீடியம் சைஸ்) உபயோகிப்பதில் தவறில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-can-i-take-coconut-and-coconut-oil-daily

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக