6 நாள்கள்... 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வரும் 24-ம் தேதி வரை 6 நாள்கள் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பெயரில் அந்நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக இன்று புறப்பட்டு ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஜி7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு சந்திப்புகளை நிகழ்த்துவார் எனக் கூறப்படுகிறது.
மூன்று நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா நாட்டுக்கு செல்கிறார். அங்கு 22ஆம் தேதி அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே உடன் இணைந்து இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான உச்ச மாநாட்டில் கலந்து கொள்வார். அதனை தொடர்ந்து அன்றைய தினமே பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த ஆஸ்திரேலியா பயணத்தின் போது ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த பயணத்தின் போது ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தும் மோடி, 23ஆம் தேதி சிட்னி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியா வம்சாவளி மக்களுடன் உரையாற்றுகிறார். அதன் பின்னர் ஆறு நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்புவார் என மத்திய வெளிவந்த துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/latest-tamil-news-live-updates-dated-on-19-05-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக