Ad

வியாழன், 25 மே, 2023

புவிசார் குறியீடு: கடலூர் கோட்டிமுளை கத்திரி உள்ளிட்ட 15 பொருள்களுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பை அடுத்திருக்கும் கோட்டிமுளை கிராமத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். காய்கறி சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இப்பகுதி மக்கள், அதில் கத்திரிக்காய்க்கு முதலிடம் அளித்து வருகின்றனர். பளபளப்பு, மருத்துவ குணம் மற்றும் சுவையுடனும் இருக்கும் இந்தக் கத்திரிக்காய் `கோட்டி முளை கத்திரிக்காய்’ என்று அழைக்கப்படுகிறது. பல தலைமுறைகளாக இந்த பாரம்பர்ய விதையை பாதுகாத்து வரும் இவர்கள், ஆண்டுதோறும் கோட்டி முளை கத்திரிக்காயை சாகுபடி செய்து வருகின்றனர். அப்பகுதி மண்ணின் தன்மையும், இந்தக் கத்திரிக்காயின் சுவைக்கு முக்கிய காரணம் என்கின்றனர் விவசாய வல்லுநர்கள்.

அரசம்பட்டி நாட்டு ரகத் தென்னை மரங்கள்

கோட்டி முளை கிராமத்தைச் சுற்றியிருக்கும் ஒட்டிமேடு, சிறுவரப்பூர், பெருந்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கத்திரிக்காயை ஆர்வமுடன் சாகுபடி செய்கின்றனர். சுமார் 100 ஹெக்டேரில்  பயிரிடப்படும் இந்தக் கோட்டி முளை கத்திரிக்காயை, பவானி, உஜாலா, பரோல் என உட்பிரிவு ரகங்களாகப் பிரித்து குறிப்பிடு கின்றனர் இப்பகுதி விவசாயிகள். கடந்த காலங்களில் வடலூர், நெய்வேலி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட உள்ளூர் சந்தைகளில் மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்தக் கத்திரிக்காய், அதன் தன்னிகரற்ற சுவையால் தமிழகம் முழுக்க ஏற்றுமதி செய்யப் படுகிறது. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு நேரடியாகவே வந்து மொத்தமாகக் கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில்தான், ``இந்த ஆண்டு கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, திருப்பூர் மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சு வெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டி முளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கறுப்புக் கவுனி அரிசி ஆகிய 10 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற திட்டமிட்டிருக் கிறோம்” என்று கடந்த மார்ச் 21 அன்று வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி,

தற்போது அவற்றுடன் கரூர் செங்கல் துவரை, ஜவ்வாது மலை சாமை, திண்டிவனம் பனிபயறு, கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்திரி, விருதுநகர் அதலக்காய் போன்றவற்றையும் சேர்த்து 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நிதி ஒதுக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு விளைபொருளுக்கும் தலா ரூ.3 லட்சம் மூலம் ரூ.45 லட்சம் நிதியை ஒதுக்கி அரசாணையை வெளியிட்டிருக்கிறார் தமிழ்நாடு வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி.



source https://www.vikatan.com/agriculture/government/for-15-objects-to-get-geocode-funds-have-been-allocated-decree-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக