Ad

புதன், 17 மே, 2023

Tamil News Today Live: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இடையில் நீதிமன்ற உத்தரவால் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து, அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு வீரர்

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டது. பின்னர் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் சாசனம் அமர்வு இன்று வழங்குகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-news-today-live-updates-dated-on-18-05-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக