கொரோனா தொற்றுக்குப் பின்னர் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்படி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிறுவனங்களில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் ஒன்று.
மெட்டா தனது முதற்கட்ட பணிநீக்க நடவடிக்கையைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொண்டது. இது நிறுவனத்தின் 13 சதவிகித ஊழியர்களைக் குறைக்கும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார். இதேபோல மார்ச் மாதத்தில், உலகம் முழுவதிலும் இருந்து 10,000 ஊழியர்கள் வரை நீக்கப்படுவார்கள் என அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், மெட்டா தனது கடைசிக்கட்ட பணி நீக்க நடவடிக்கைகளை இந்த வாரத்தில் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்க்கெட்டிங், அட்மினிஸ்ட்ரேஷன், ஹியூமன் ரிசோர்ஸ் எனப் பல துறைகளைச் சேர்ந்த 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இந்திய மெட்டா ஊழியர்களும் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். கடந்த முறை பணிநீக்க நடவடிக்கை மேற்கொண்ட போது, நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் வழங்கப்பட்டது. அதைப் போலவே இந்த முறையும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/business/companies/layoff-announcement-in-meta
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக