Ad

புதன், 1 மார்ச், 2023

RRR: விருது நிகழ்வுகளில் பங்கேற்கும் படக்குழுவினர், நிராகரிக்கப்படும் தயாரிப்பாளர்! காரணம் என்ன?

ராஜமௌலி இயக்கத்தில் 5 மொழிகளில் வெளியான ‘RRR’ திரைப்படம் உலகெங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதையும், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஸ்டன்ட், பாடல், ஆக்‌ஷன் என 4 சர்வதேச 'Hollywood Critics Association' விருதுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள 95-வது ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது.

‘RRR’ படக்குழுவினர்

தொடர்ந்து விருதுகளைக் குவித்து வரும் ‘RRR’ படகுழுவினருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணமே உள்ளன. இதனிடையே இப்படத்தின் தயாரிப்பாளரான தனய்யாவிற்குச் சர்வதேச விருது விழாக்களில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டாவா ('பாகுபலி' தயாரிப்பாளர்) இல்லை தனய்யாவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், ‘RRR’ படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது 'பாகுபலி'யின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டாதான் ராஜமௌலி உடன் முன்னிறுத்தப்படுகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் தனய்யா படம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.

ராஜமௌலி, தனய்யா

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், கீரவாணி இவர்களுக்கு மட்டுமே ராஜமௌலி முக்கியத்துவம் கொடுப்பதாகவும் படத்தயாரிப்பாளரான தனய்யாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆஸ்கர் விருதுக்காகச் சர்வதேச அளவில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டபோது தனய்யா பெரிய அளவில் பணத்தைக் கொடுத்து உதவ முன்வராததுதான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இப்படிக் கோடிகளில் செலவு செய்து உலக அரங்கில் படத்தைப் பிரபலப்படுத்த தனய்யாவுக்கு விருப்பமில்லை என்றும், அதனால் ராஜமௌலியே முன்வந்து தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது.



source https://cinema.vikatan.com/tollywood/dvv-danayya-the-producer-of-rrr-has-been-sidelined-in-the-international-award-ceremonies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக