நமது நாட்டின் முன்னணி தனியார் துறை சார்ந்த வங்கியான பந்தன் வங்கியின் பந்தன் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், க்ரிஸ் கேப்பிட்டல் நிறுவனத்துடன் இணைந்து ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை ரூ.4,500 கோடிக்கு வாங்கியிருந்தது. இந்த இணைப்புக்கு கடந்த நவம்பர் மாதம் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அனுமதி அளித்திருந்தது. இதன் மூலம் மார்ச் 13-ம் தேதி முதல் ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயர் இனி பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் என்று மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய லோகோவையும் பந்தன் ஃபைனான்சியல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இனி ஐடிஎஃப்சி சார்ந்த அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் ஐடிஎஃப்சி என்ற பெயருக்கு பதிலாக பந்தன் என்று பெயர் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
மெரிக்க ட்ரஷரி பத்திரங்களில் முதலீடு..!
இதனைத் தொடர்ந்து பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதல் முறையாக அமெரிக்காவின் முன்னணி ஃபைனான்சியல் நிறுவனமான ஜேபி மார்கன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதலாவதாக அமெரிக்க ட்ரஷரி பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டத்தை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவின் ட்ரஷரி திட்டங்கள் என்பது உலக அளவில் மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான ஃபிச் (Fitch) நிறுவனத்தின் தரக்குறியீடு AAA என்ற அளவில் உள்ளது.
தற்போது பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் பணம், ஜேபி மார்கன் பீட்டா பில்டர்ஸ் யூஎஸ் ட்ரஷரி பாண்ட் 0-1 ஆண்டுகள் யூசிஐடிஎஸ் இடிஎஃப் (JP Morgan Beta Builders US Treasury Bond 0-1 yrs UCITS Scheme) திட்டத்தில் முதலீடு செய்யப்படும். முதலீட்டில் ஒரு பரவலாக்கம் தேவைப்படுவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
source https://www.vikatan.com/personal-finance/money/invest-in-us-treasury-bonds-bandhan-mutual-fund-launches-new-scheme
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக