பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்குப் பிறகான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதியிருந்தன. இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல்- ஜடேஜா இணையின் அதிரடி ஆட்டத்தினால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே கே.எல்.ராகுலின் ஆட்டத்திறன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த விமர்சனங்களையெல்லாம் நேற்று உடைத்தெறிந்திருக்கிறார் கே எல் ராகுல். அதேபோல காயம் காரணமாக 8 மாத மாதத்திற்கு பிறகு தனது 300 வது சர்வதேச போட்டியில் களம் இறங்கி 45* ரன்கள் குவித்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் ஜடேஜா. கே.எல்.ராகுல் - ஜடேஜா இணைதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய சொன்னது. ட்ராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து மிட்செல் மார்ஷ் ஓபனிங் செய்தார். ஐசிசி நம்பர் ஒன் பௌலர் முகமது சிராஜிடம் முதல் ஓவரிலேயே 5 ரன்களில் ஹெட் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க, மீண்டும் விக்கெட் விடாமல் பவர் ப்ளேவை சரியாக பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசி ரன்களை குவித்தார் மிட்செல் மார்ஷ். ஸ்மித்தும் தன் பங்குக்கு பவர் ப்ளேயில் பவுண்டரிகளின் அடித்திருந்தார். பவர்ப்ளே முடிவில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வகித்து 59 ரன்கள் எடுத்திருந்தனர் மிட்செல் மார்ஷ் - ஸ்மித் கூட்டணி.
இரு பேட்டர்களும் நல்ல செட்டில் ஆக தொடங்கினர். கேப்டன் ஹர்திக் பாண்டியாவே இவர்களின் விக்கெட்டை வீழ்த்த எண்ணி பந்தை கையில் எடுத்தார். அவரின் ஓவரில் ஸ்மித் ஸ்கொயர் கட் அடிக்க முயற்சித்த போது பந்து எட்ஜாக அதை விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் அசத்தலாக பாய்ந்து பிடித்தார். இதன்மூலம் ஸ்மித்தும் 22 ரன்கள் அவுட் ஆனார். லபுஷேனுடன் இணைந்து குல்தீபின் அடுத்தடுத்த ஓவரிகளில் பவுண்டரிகள் சிக்ஸர்கள் அடித்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார் மார்ஷ்.
இரு பேட்டர்களும் நல்ல செட்டில் ஆக தொடங்கினர். கேப்டன் ஹர்திக் பாண்டியாவே இவர்களின் விக்கெட்டை வீழ்த்த எண்ணி பந்தை கையில் எடுத்தார். அவரின் ஓவரில் ஸ்மித் ஸ்கொயர் கட் அடிக்க முயற்சித்த போது பந்து எட்ஜாக அதை விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் அசத்தலாக பாய்ந்து பிடித்தார். இதன்மூலம் ஸ்மித்தும் 22 ரன்கள் அவுட் ஆனார். லபுஷேனுடன் இணைந்து குல்தீபின் அடுத்தடுத்த ஓவரிகளில் பவுண்டரிகள் சிக்ஸர்கள் அடித்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார் மார்ஷ்.
முதல் 20 ஓவர்களில் சதத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார் மார்ஷ் . மார்ஷ் விக்கெட்டை வீழ்த்த ஜடேஜாவை கொண்டு வந்தார் பாண்டியா. ஜடேஜாவும் கச்சிதமாக மார்ஷின் விக்கெட்டை வீழ்த்தி காட்டினார். ஜடேஜா வழக்கத்தை விட திடீரென ஒரு மெதுவான பந்தை வீச, அதனை எதிர்பார்க்காத மார்ஷ் தூக்கியடிக்க சிராஜ் அழகாக கேட்ச் பிடித்தார்.
அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷின் ஆட்டம் 81 ரன்களில் முடிவுக்கு வந்தது. இந்த ஒரு பந்து ஆட்டத்தை அப்படியே மாற்றிவிட்டது. அடுத்து லபுஷேன் விக்கெட்டை ஸ்பின்னர் குல்தீப் ஓவரிலேயே பாயிண்ட் பொசிஷனில் அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் அற்புதமான கேட்ச்சாக பிடித்தார் ஜடேஜா. அந்த நிமிடங்களில் தலைசிறந்த ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸை அது நினைவுப் படுத்தியது. வேகப்பந்து வீசச்சாளர்களுக்கு பிட்ச் சாதகமாக இருப்பதால் ஷமி மீண்டும் அழைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தது ஷமியின் அந்த ஸ்பெல் . நிதானமாக விளையாடி கொண்டிருந்த ஜோஷ் இங்கிலீஷ் 25 ரன்களில் வெளியேற அதே ஓவரில் க்ரீன் போல்ட் ஆகி 12 ரன்களில் வெளியேறினார். அடுத்த ஓவரில் ஸ்டாய்னிஸை டக் அவுடாக்கி ஆக்கினார் ஷமி. இந்த மூன்று விக்கெட்டுகளும் ஷமியின் இரண்டே ஓவர்களில் நிகழ்ந்தவை ஆகும். ஆஸ்திரேலியா அத்தனை குறைவான ஸ்கோரில் ஆல் அவுட் ஆனதற்கு ஷமியின் இந்த ஓவர்கள் முக்கிய காரணமாக அமைந்தது. ஜடேஜாவும் மேக்ஸ்வெல்லை 8 ரன்களில் அவுட் செய்தார். அடுத்து களமிறங்கிய லோயர் ஆர்டர் பேட்டர்களும் பிரகாசிக்காததால் 188 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட்டாக்கி அசத்தினர் இந்திய பௌலர்கள். 129/3 என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அடுத்த 60 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
எளிய ஸ்கோரை துரத்திய இந்திய அணிக்கும் சவால் காத்துக் கொண்டிருந்தது.
இஷான் கிஷனை மூன்று ரன்களில் ஸ்டாய்னிஸ் வெளியேற்றினார். எப்படி ஷமி ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் பேட்டர்களை வெளியேற்றினாரோ அதேபோல ஸ்டார்க் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களை தனது வேகப்பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
விராட் கோலி நான்கு ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேற அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கே.எல். ராகுலுடன் இணைந்து கில் விக்கெட் விடாமல் ஆடிவந்தார். இருப்பினும் மீண்டும் ஸ்டார்க் பந்தில் 25 ரன்களில் கில்லும் லபுஷேனின் அசத்தலான கேட்சினால் விக்கெட்டை பறிகொடுத்தார் கில் . 39 /4 என்ற மோசமான நிலையில் இந்தியா ஆடி வந்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் நிதானமாக விளையாடத் தொடங்கினர். முதல் பந்திலேயே பவுண்டரியுடன் ஸ்டார்க்கை வரவேற்றார் கே.எல்.ராகுல். விக்கெட் இழப்பின்றி தேவையான நேரங்களில் சில நல்ல ஷார்ட்கள் மூலம் பவுண்டரிகளை அடித்து மெல்ல மெல்ல ஸ்கோரை ஏற்றினர். இருப்பினும் ஸ்டாய்னிஸ் பவுன்ஸராக வீசிய பந்தை அடிக்க பார்த்து க்ரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹர்திக் பாண்டியா. 5 விக்கெட்டுகள் இழந்து 83 ரன்கள் என்ற நிலையில் ஜடேஜா களமிறங்கினார். ஜடேஜா - ராகுல் இணை மீது சேஸிங் பொறுப்பு மொத்தமும் ஏற்றப்பட்டது. அந்தப் பொறுப்பை உணர்ந்த இரு பேட்டர்களும் மெதுவாக செட்டில் ஆகி ஆட தொடங்கினர்.
71 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார் கே.எல்.ராகுல் . அடுத்தடுத்து சில பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்க ஜடேஜாவின் பவுண்டரியுடன் 188 டார்கெட்டை எளிதாக சேஸ் செய்தது இந்தியா. ராகுல் -ஜடேஜா இணை கடைசி வரை வீழாமல் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கே.எல். ராகுல் 75 ரன்களுடனும் ஜடேஜா 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் 39.5 ஓவர்களில் 191 ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற்றது . அதிகபட்சமாக 49 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க்.
கே.எல்.ராகுலுக்கும் ஜடேஜாவுக்கும் தங்களை நிரூபித்து காட்ட வேண்டிய ஆட்டமாக நேற்றைய ஆட்டம் அமைந்திருக்கின்றது. இருவரும் அதை சரியாக உணர்ந்துக்கொண்டு அற்புதமான கம்பேக்கை கொடுத்துள்ளனர். இந்த ஆட்டத்தை வென்றிருந்தாலும் அடுத்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்டிங் முறையாக பெர்ஃபார்ம் செய்தே ஆக வேண்டும்.
source https://sports.vikatan.com/cricket/india-vs-australia-1st-odi-match-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக