Ad

புதன், 29 மார்ச், 2023

புனே: தற்கொலை செய்துகொள்ள மருந்து தேடிய மாணவர்: அலர்ட் கொடுத்த அமெரிக்க அதிகாரிகள்; நடந்தது என்ன?

இணைய தேவை அதிகரித்தப் பிறகு எது தேவையென்றாலும் அதனை இண்டர்நெட்டில் தேடுவதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். திருடுவது எப்படி, வெடிகுண்டு செய்வது எப்படி, தற்கொலை செய்வது எப்படி என்பது உட்பட அனைத்து தகவல்களும் இணையத்தளத்தில் தேடப்படுகிறது. கடந்த மாதம் மும்பை வாலிபர் ஒருவர் எப்படி தற்கொலை செய்வது என்று இண்டர்நெட்டில் தேடிய போது அதனை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்து உடனே இண்டர்போல் மூலம் மும்பை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இண்டர்போல்

இதனால் அந்த வாலிபரின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது அமெரிக்காவின் உதவியால் புனேயை சேர்ந்த மேலும் ஒரு மாணவரின் தற்கொலையை போலீஸார் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அமெரிக்க வெப்சைட் ஒன்றில் புனேயை சேர்ந்த ஒருவர் அமைதியான முறையில் தற்கொலை செய்வது எப்படி என்றும், அதற்கான மருந்து எது என்பது குறித்தும் தேடிக்கொண்டிருந்தார். உடனே அந்த வெப்சைட் உரிமையாளர் இது குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த அதிகாரிகள் இந்தத் தகவலை இண்டர்போலுக்கு தெரிவித்தனர்.

அமெரிக்க இண்டர்போல் அதிகாரிகள் இது குறித்து புனே இண்டர்போல் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் உடனே மும்பை போலீஸாருக்கு இந்த தகவலைப் பகிர்ந்தனர். உடனே மும்பை போலீஸார் தற்கொலைக்கு முயன்றது யார் என்றும், அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் தேடினர். குற்றப்பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர் புனேயில் உள்ள மருத்துவ கல்லூரியில் பி.எச்.எம்.எஸ் படித்து வருவதை கண்டுபிடித்தனர். உடனே குற்றப்பிரிவு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்ற போது மாணவர் பிராக்டிக்கல் தேர்வில் இருந்தார். மருத்துவ கல்லூரியின் உதவியோடு மாணவரிடம் போலீஸார் பேசினர். அவருக்கு 2 மணி நேரத்திற்கும் மேல் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. சொந்தப் பிரச்னை, படிப்பில் பிரச்னை போன்ற காரணங்களால் தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. தனக்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டரிடம் கூட அமைதியான முறையில் தற்கொலை செய்ய மருந்து எது என்று கேட்டார். மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இணையம்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற கடுமையாக போராடியதாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர். படிப்பிலும் சிக்கலை சந்தித்து வந்ததால் மாணவர் மன அழுத்தத்தில் இருந்தது சக மாணவர்களிடம் விசாரித்த போது தெரியவந்தது. அமெரிக்காவிலிருந்து தகவல் கிடைத்த இரண்டு மணி நேரத்தில் போலீஸார் விரைந்து செயல்பட்டு மாணவரின் தற்கொலையை தடுத்து நிறுத்தினர்.



source https://www.vikatan.com/crime/cops-avert-suicide-of-a-student-in-pune-thanks-to-interpol-alert

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக