Ad

புதன், 1 மார்ச், 2023

கடும் வீழ்ச்சி, விமர்சனத்துக்கு மத்தியில் மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க்..!

அமெரிக்காவைச் சேர்ந்த, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்,  உலகின் நம்பர் 1 பணக்காராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். ட்விட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக,  தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்ற எலான் மஸ்க்,  தனது முழு கவனத்தையும் ட்விட்டர் மீதே செலுத்தி வந்தார்.

எலான் மஸ்க்

ஆள்குறைப்பு நடவடிக்கை எடுத்ததில் 75 சதவிகிதத்தினரை பணிநீக்கமும் செய்தார். அவரிடம் இருந்த குறும்புத்தனமும்,   ட்விட்டர் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சர்ச்சையும் அவரை பெரும் வீழ்ச்சியில் தள்ளியது. அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்கு வரலாறு காணாத அளவுக்கு மதிப்பு சரிந்தது. இதனால் அதிக சொத்து மதிப்பை இழந்தவர் பட்டியலில்  உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில்  இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்துக்கு வந்தார்.

எலான் மஸ்க்

இந்நிலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்த சந்தை நிலவரப்படி  எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 187.1 பில்லியன் டாலராக ஆக உயர்ந்தது.  

தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குமதிப்பு 100% அதிகரித்துள்ளது. இதனால் அர்னால்ட்டின் 185.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டினார். அவரது சொத்து மதிப்பு அதிகரித்ததால் உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் எலான் மஸ்க்.



source https://www.vikatan.com/business/companies/elon-musk-topped-the-worlds-richest-list

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக