சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள `பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது.
கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட்டான 'மஃப்டி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இருப்பினும், ஒரிஜினல் வெர்ஷனின் மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு முற்றிலும் மாற்றபட்ட திரைக்கதை, மாறுபட்ட கதாபாத்திர வடிவமைப்பில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் கிருஷ்ணா. ஏ.ஆர் ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார்.
நீண்ட நாள்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய இயக்குநர் கிருஷ்ணா, "இந்த படத்தை எனக்கு ஆஃபர் பண்ணது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஒரு நாள் இந்தப் படத்தை டிராப் பண்ணவேண்டிய சூழல் வந்தது. ரொம்ப நெருக்கடியான நிலைமை. அப்போதான் STR இந்தப் பட ஷூட்டிங்ல இணையப் போற டைம். நான் ரொம்ப நம்பக்கூடிய கடவும் அனுமன். அவரை வேண்டிக்கிட்டு வந்து அமைதியா உட்கார்ந்தேன். பைத்தியம் பிடிச்ச மாதிரி சுத்திட்டு இருந்தேன். அப்பறம் ஒரு பத்து நிமிஷம் ஞானவேல் ராஜா சார் கூட பேசினேன். அந்தப் பத்து நிமிஷத்துக்கு அப்பறம்தான் எல்லாமே நடந்தது. நேஹா ஞானவேல் ராஜாதான் அதற்குக் காரணம். அவங்கதான் என்ன திரும்பப் பேசிப் பார்க்கச் சொன்னாங்க. அனுமனுக்கு ஞானவேல் சாருக்கும் நன்றி" என்றவர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படத்தின் நடிகர்கள் பற்றித் தொடர்ந்து பேசினார்.
"ரஹ்மான் சார்கிட்ட நேத்து நைட்டு பரபரப்பா 8 மணிக்கு டிரெய்லருக்காக மியூசிக் கேட்டேன். ரொம்ப அமைதியா எனக்குப் பண்ணிக் கொடுத்தார். அவரைப் பற்றிப் பேசணும்னா பேசிட்டே போகலாம். ரொம்ப பெரிய இன்ஸ்பிரேஷன் அவரு. STR-க்கு எனக்கும் 20 வருஷப் பழக்கம். அவரோட 'தம்' படத்துக்கு அப்பறமே நான் அவர்கூட ஒரு படம் பண்ணியிருக்க வேண்டியது. ஆனா, அப்ப பண்ண முடியல.
ஷூட்டிங்குக்கு முதல் நாள் நைட் டயலாக் பேப்பர் வாங்கிட்டு போவாரு. அடுத்த நாள் வந்து தூள் கிளப்பிடுவாரு. எனக்கு முழு சுதந்திரம் தந்தாரு. கௌதம் கார்த்திக்கைத்தான் ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கேன். ஒரு புது கௌதம் கார்த்திக்கை நீங்க திரையில பார்ப்பீங்க! பிரியா பவானிசங்கர் ரொம்பவே ஸ்வீட்" என்றார்.
'பத்து தல' படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், "எனக்கு STR-கிட்ட புடிச்ச குவாலிட்டி என்னன்னா, அவருக்கு இணையான எதிரி யாருமில்லை என்று நினைப்பதுதான். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி பார்த்த சிம்பு இன்னமும் மாறாம அப்படியேதான் இருக்காரு. எந்த நேரத்திலும் எந்த நடிகரைப் பார்த்தும் பொறாமைப்பட மாட்டார். அவங்களை ரசிப்பாரு. அவங்க நல்லா நடிச்சிருந்தா கூப்பிட்டு உபசரிப்பாரு.
எனக்கு ஒரு பொண்ணு மட்டும்தான். கௌதம் கார்த்திக் என் பையன் மாதிரி. என்னோட சினிமா வாரிசு அவர்தான். 52 நாள்ல அவரோட 'தேவராட்டம்' படம் பண்ணினோம். இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு தவிர்க்க முடியாத ஹீரோவா வருவாரு.
கிருஷ்ணா என்னோட முதல் இயக்குநர். ஃபர்ஸ்ட் லவ். அவரோட பேட்டிப் பார்த்தேன். குடும்பச் சூழல் காரணமாக Uber ஓட்டுறேன்னு சொன்னாரு. 16 வருஷமா பெருசா டச்சுல இல்லை. அப்பறம் நான்தான் கூப்பிட்டுப் படம் பண்ணலாம்ன்னு சொன்னேன்" என்றார் நெகிழ்ச்சியாக.
source https://cinema.vikatan.com/kollywood/director-krishna-speech-in-pathu-thala-audio-launch-event
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக