Ad

புதன், 1 மார்ச், 2023

முகக்கவசம் இனி கட்டாயமில்லை... 945 நாள்களுக்கு பிறகு ஹாங்காங் மக்களுக்கு விடுதலை!

ஊரடங்கு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை, கட்டாய முகக்கவசம் என கொரோனா தொற்றுப்பரவலின் போது, பல நாடுகளும் பல்வேறு கட்டுப்பாட்டுகளைத் தீவிரப்படுத்தின.

கொரோனா

கொரோனா தொற்றின் பாதிப்பு குறைகையில், பல நாடுகளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்திக் கொண்டன. ஆனால் ஹாங்காங்கில் மட்டும் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீடித்தன.

ஹாங்காங்கில் 2022-ல் கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சற்று தளர்த்திய போதும், முகக்கவசம் அணிவதில் மட்டும் எந்தத் தளர்வும் ஏற்படுத்தப்படவில்லை. 2020-ல் இருந்தே சுமார் 945 நாள்கள் ஹாங்காங் மக்கள் முகக்கவசத்தோடே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மார்ச் 1 புதன்கிழமையன்று முகக்கவசம் அணியும் விதியை அந்நாட்டு அரசு தளர்த்தி அறிவித்து இருக்கிறது. இது குறித்து தலைமை நிர்வாகி ஜான் லீ கூறுகையில், ``மார்ச் 1 முதல் நாங்கள் முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்புவோம். கட்டாய முகக்கவசம் அணியும் ஆணையை நீக்குவது, ஹாங்காங் இயல்பு நிலைக்குத் திரும்புவதைக் காட்டும் தெளிவான ஒரு செய்தி’’ எனக் கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/oddities/international/hong-kong-scraps-one-of-world-s-longest-mask-mandate-after-945-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக