ஹைதராபாத்தில் உள்ள விக்னான பாரதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (Vignana Bharathi Institute of Technology) பயின்று வரும் முதலாம் ஆண்டு பி.டெக் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமையன்று இரவு கூடி போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.
மாணவிகள் அனுமதியின்றி அவர்களை ஒரு வாட்ஸ் அப் குழுவில் இணைத்ததைத் தொடர்ந்து, கடந்த 5 நாள்களாக முன், பின் அறியாத நபர்களிடமிருந்து மாணவிகளுக்கு அழைப்புகள் வந்திருக்கின்றன. குரூப்பின் அட்மின், ஒரு மாணவியின் வாட்ஸ் அப் டிஸ்பிளே படத்தை மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி, சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.
இது குறித்து மாணவிகள், தங்களது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில் வைக்கப்பட்ட புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாக காட்கேசர் காவல்நிலையத்தில் ஜனவரி 4, புதன்கிழமையன்று புகார் அளித்துள்ளனர்.
மாணவிகளிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், அவர்களின் புகார்களை ஏற்று, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (பாதிப்புக்குள்ளாகும் தகவலை அனுப்புதல்) 66 (A) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதோடு பாதிக்கப்பட்ட பெண்களின் மொபைல் போன்கள், சைபர் க்ரைம் போலீஸாருக்கு சோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில், ``எங்கள் கல்லூரி மாணவியோ, கல்லூரி பணியாளரோ இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், எங்கள் கல்லூரி மாணவியின் நண்பர் குற்றவாளியாக இருக்கலாம். மாணவி, தன் கான்டாக்ட்களை அவரிடம் ஷேர் செய்திருக்கலாம்" என்று கூறுகின்றனர். தொழில்நுட்பங்கள் வளர்ந்தபோதும், அதிலும் பெண்களுக்கான புதுப் புது சிக்கல்களும் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.
source https://www.vikatan.com/social-affairs/women/mysterious-person-morphing-and-threatening-girls-whatsapp-photos-what-is-the-background
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக