Ad

புதன், 11 ஜனவரி, 2023

மார்ட்டின் லூதர் கிங்க்கு மரியாதை... புத்தகக் கண்காட்சியில், அமெரிக்க துணைத் தூதரகத்தின் அரங்கு!

சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள‌ சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் அமெரிக்க மையம், மாணவர்கள், ஆராய்ச்சியாள‌ர்கள் மற்றும் பொதுமக்களுக்கான‌ ஏராளமான புத்தகங்கள் குறித்து விழிப்புணர்வு, போட்டிகள், கலந்துரையாடல்கள், மற்றும் கதை சொல்லல் அமர்வுகள் எனப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளது.

கல்லூரி மாணவர்கள்

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமைந்துள்ள‌ அமெரிக்க மையம், கடந்த 76 ஆண்டுகளாக சென்னையின் கலாசார மற்றும் இலக்கியத் தளங்களின் அங்கமாகச் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க கலாசார மையம் மற்றும் அமெரிக்க நூலகம் என்று முன்னர் அழைக்கப்பட்ட அமெரிக்க மையம், சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 46-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் எஃப் 57-ல் இடம்பெற்றுள்ளது. புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான ஜனவரி 22 வரை இந்த அரங்கு செயல்படும்.

வரும் ஜனவரி 16 அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் பிறந்த தினம். சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள சென்னை அமெரிக்க மையத்தின் அரங்கில், இது கொண்டாடப்பட இருக்கிறது. அவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ``உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் உங்கள் லட்சியங்களால் இயக்கப்படும் அமெரிக்க கனவு" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டதாக அமெரிக்க மையத்தின் அரங்கு அமைந்துள்ள‌து.

நிகழ்வு

அமெரிக்க கல்வி மற்றும் பரிமாற்ற வாய்ப்புகள் குறித்தும், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் மையத்தில் உள்ள வசதிகள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் அமெரிக்க மையத்தின் அரங்கம் அமைந்துள்ளது. சென்னை அமெரிக்க மையத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் 15 ஆயிரம் புத்தகங்களும் ஏராளமான மல்டி-மீடியா மற்றும் மின்நூல் வளங்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமெரிக்க மையத்தின் அரங்கில்,

  • மாணவர்களுக்கான எழுத்து மற்றும் கவிதைப் போட்டிகள்,

  • ஆங்கில ஆசிரியர்களுடனான‌ கலந்துரையாடல்,

  • குழந்தைகளுக்கான புத்தக வாசிப்பு மற்றும் கதைசொல்லும் அமர்வுகளும் இடம்பெறும்.

  • ஃபுல்பிரைட் மற்றும் பிற பரிமாற்றத் திட்ட பயனர்களின் எழுத்துப் பணிகளை வெளிப்படுத்தும் வகையில், புத்தகங்கள் குறித்த உரையாடல்கள் ஆகியவை நடைபெறும்.

அரங்கில்

பங்கேற்பவர்களின் திறன், பன்முகத்தன்மை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் இருக்கும். சிறந்த படைப்புகள் அமெரிக்க மையத்தில் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், சிறந்த படைப்பாளிகள் அமெரிக்க மையம் ஏற்பாடு செய்யும் எழுத்துப் பட்டறைகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள். 

``அமெரிக்காவின் உண்மையான உணர்வு, வாய்ப்புகள், மற்றும் உறுதிமொழியை வெளிப்படுத்தும் வகையில் புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, மாற்றத்தை உருவாக்கக்கூடிய உரையாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் மாற்றத்தை உருவாக்கும் அடுத்த தலைமுறையினருக்கு சவால்கள், ஊக்கம், மற்றும் முன்னேற்றத்தை வழங்குதல்" எனும் அமெரிக்க மையத்தின் புதிய லட்சியத்தை பிரதிபலிக்கும் வகையிலும் சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த அரங்கு அமைந்துள்ளது.

திறப்பு விழாவில்

புத்தகக் கண்காட்சியில், அமெரிக்க மையத்தின் அரங்கை சென்னைக்கான அமெரிக்க பொறுப்பு துணைத் தூதர் ரமோன் மெனண்டெஸ்-கரேரா கடந்த ஜனவரி 7, சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் பொது விவகாரங்கள் அதிகாரி ஜெனிஃப‌ர் புல்லக் முன்னிலையில் திறந்து வைத்தார்.   

நிகழ்ச்சி நிரல்

இது குறித்து மெனண்டெஸ்-கரேரா கூறுகையில், ``சென்னை புத்தகக் கண்காட்சியில் மீண்டும் பங்கேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்! அமெரிக்க மையத்தின் புதிய கொள்கை தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான சென்னை புத்தகக் கண்காட்சி மூலமாக எங்கள் பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கும், சென்னை மக்களுடனான‌ எங்கள் உறவைக் கொண்டாடுவதற்கும் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களுடைய கலாசார மற்றும் கல்வி பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதையும், இளைஞர்களின் கனவுகளை  நனவாக்கும் வாய்ப்புகளை ஊக்குவிப்பதையும், புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் குறித்து அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியில் நாங்கள் பங்கேற்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.



source https://www.vikatan.com/events/announcements/hall-of-american-consulate-in-chennai-book-fair

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக