Ad

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

கைது செய்யப்பட்ட டி.டி.எஃப் வாசன்... காவல்துறையிடம் விளக்கம்... நடந்தது என்ன?!

கோவை யூ-ட்யூபர் டி.டி.எஃப் வாசன் சமீப காலங்களாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவுடன் கோவை சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பயணித்தார்.

ஜி.பி முத்து டி.டி.எஃப் வாசன்

இதுகுறித்து டி.டி.எஃப் வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால், கைது பயத்தில் வாசன் வீடியோ வெளியிடாமல் இருந்தார்.

இதையடுத்து போத்தனூரில் பதியப்பட்ட வழக்குக்காக மதுக்கரை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். பிறகு தன்னை ஊடகங்கள் திட்டமிட்டு பிரச்னையில் சிக்க விடுவதாக ஓர் வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பல்வேறு பயணங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

டி.டி.எஃப் வாசன்

இந்நிலையில், பெங்களூர் செல்வதற்காக நேற்று  இரவு அவர் இருசக்கர வாகனத்தில் சூலூர் கண்ணம்பாளையம் அருகே சென்றுள்ளார். அப்போது வாகனத் தணிக்கையின் போது போலீஸிடம் சிக்கினார்.

அவரை கைது செய்த போலீஸ், சூலூர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடந்த நிலையில், அவர் ஸ்டேசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போலீஸார் கூறுகையில், "அதிவேகப் பயணம் என்பது ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குதான்.

டி.டி.எஃப் வாசன்

அதனால் விசாரித்து அனுப்பிவிட்டோம்.” என்றனர். இதுகுறித்து டி.டி.எஃப் வாசன் செய்தியாளர்களிடம், “என் தவறை உணர்ந்துவிட்டேன்.  இனிமேல் வேகமாக செல்ல மாட்டேன் என கூறியிருக்கிறேன்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-police-arrested-ttf-vasan

Doctor Vikatan: தீக்காயத்துக்கு கட்டுப்போடுவது சரியா?

Doctor Vikatan: என் மகள் சமீபத்தில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீரை காலில் ஊற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய் தடவினால் சரியாகிவிடும் என விட்டுவிட்டோம். ஆனால் பெரிய அளவில் கொப்புளம் வந்துவிட்டது. பயந்துபோய் அருகில் ஒரு மருத்துவரிடம் சென்றோம். அவர் கொப்புளத்தை உடைத்துவிட்டு மேல்தோலை வெட்டி எடுத்துவிட்டு மருந்து வைத்து கட்டுப்போட்டார். மூன்று நாள்களுக்கு தினமும் கட்டு போட்டே வந்தார். பார்ப்பவர் அனைவரும் தீக்காயம், சுடுநீர் காயத்துக்கு கட்டுப்போட்டால் ஆறாது என அச்சுறுத்தினார்கள். பிறகு அனுபவம் வாய்ந்த வேறு மருத்துவரிடம் சென்றோம். அவர் கட்டினை அகற்றிவிட்டு, செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி, மாத்திரை என சிகிச்சை அளித்தார். என்னுடைய இந்த அனுபவத்தில் சில கேள்விகள் இருக்கின்றன.

1. தீக்காயம், சுடுநீர் கொட்டுதல் நிகழ்ந்தால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன? (இரண்டாவதாக நான் பார்த்த மருத்துவர் குளிர்ந்த நீரில் ஒருமணி நேரம் காலை வைத்திருந்தால் கொப்புளமே வந்திருக்காது என, அவ்வை சண்முகி திரைப்படத்தை உதாரணமாகச் சொன்னார். இது சரியா?)

2. தீக்காயம், சுடுநீர் காயத்துக்கு கட்டுப்போடுவது சரியா..?

- சூர்யா, சென்னை.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பிளாஸ்டிக், ஏஸ்தெட்டிக், ரீகன்ஸ்ட்ரக்ட்டிவ் அறுவை சிகிச்சை மருத்துவர் செல்வ சீதாராமன்...

மருத்துவர் செல்வ சீதாராமன்

அடுப்படியில் உள்ள சூடான உணவுகள், கொதிக்க வைத்த நீர், குழம்பு, சாம்பார் உள்ளிட்டவை குழந்தைகள் மேலே பட்டு ஏற்படும் தீக்காயங்கள் வீடுகளில் மிகவும் சகஜம். இப்படி ஏற்படும் தீக்காயங்களை உடனடியாக குழாய் தண்ணீரைத் திறந்துவிட்டு அதில் ஐந்து நிமிடங்களுக்குக் காட்டலாம். வலி அதிகமிருந்தால் குளிர்ந்த டவலை அதன்மேல் வைக்கலாம். காயம் பட்டதும் உடனடியாக வலியைக் குறைப்பதற்கான வழி இது. நீங்கள் கேட்டதுபோல ஒரு மணி நேரமெல்லாம் குளிர்ந்த நீரில் வைத்திருக்க வேண்டியதில்லை. கட்டும் தேவையில்லை.

குழாய் தண்ணீரில் காட்டுவதால் இன்ஃபெக்ஷன் பரவும் வாய்ப்பும் குறையும். ரொம்பவும் லேசான காயம், சருமம் சிவந்திருக்கிறது.... அவ்வளவுதான் என்றால், அதன் மேல் மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் அல்லது வாசலைன் அல்லது கற்றாழை கலந்த க்ரீம் தடவினாலே போதுமானதாக இருக்கும். ஒருவேளை காயம் பெரிதாக இருக்கிறது, முகம் மாதிரியான இடங்களில் இருக்கிறது, வலியும் அதிகம் என்ற நிலையில் உடனே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது.

சூடான நீர் பட்டு ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற உங்கள் கேள்வியில் 3 விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். அந்தக் காயத்தின் ஆழம், அது எந்தளவுக்குப் பரவியிருக்கிறது, அதில் இன்ஃபெக்ஷன் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்ற விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி சிறிய, லேசான காயம்தான், மேலோட்டமான பாதிப்புதான் என்றால் அதற்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஆயின்மென்ட் போட்டாலே சரியாகிவிடும். கட்டுப்போட வேண்டியதில்லை.

Injury

ஆழமான, பெரிய காயம் என்றால் அதற்கு வெளிப்புற வழியே ஊசியின் மூலம் குளுக்கோஸ் திரவம் செலுத்த வேண்டி வரலாம். இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தால் ஆன்டிபயாடிக் கொடுக்க வேண்டி வரும். தவிர சில இடங்களில் உள்ள தீக்காயங்களுக்கு ஸ்பெஷல் சிகிச்சை தேவைப்படும். உதாரணத்துக்கு முகம், அந்தரங்க உறுப்புகள், கைகள் போன்ற பகுதிகளில் படும் காயங்கள். எனவே, காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-is-it-ok-to-bandage-a-burn

திமுக: சென்னை மேற்கு மாவட்டம்... சிற்றரசுவுக்கு எதிராக வந்த `மூவர்’ - பின்னணி என்ன?!

ஒருவழியாக 15-வது தி.மு.க உட்கட்சித் தேர்தல் கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல்தான் கடைசி. அக்டோபர் 7-ம் தேதி ஒருநாள் மட்டும் மனுத்தாக்கல் நடக்கிறது. அதன்பிறகு, தேர்வான மொத்த பொறுப்பாளர்களுக்கும் அக்டோபர் 10-ம் தேதி நடக்கிற பொதுக்குழுவில் ஒப்புதல் கொடுக்கப்படும்.

மதன்மோகன்

இந்தச் சூழலில், மற்ற மாவட்டங்களை விட சென்னை மேற்கு மாவட்டத்தில்தான், சிட்டிங் மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசுக்கு எதிராகவே, அவருக்குக் கீழுள்ள பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர். சிற்றரசு, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதியின் தீவிர ஆதரவாளர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். 'அப்படியிருக்கும்போது, சிற்றரசுக்கு எதிராக ஏன் இந்த மோதல் போக்கு?' என்பது குறித்து சென்னை மேற்கு மாவட்ட மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.

“ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பிறகு, சென்னை மாவட்ட தி.மு.க அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்ரமணியன் கைகளுக்கு முழுவதுமாகச் சென்றுவிட்டது. இதர மாவட்டப் பொறுப்பாளர்களில், இளைய அருணா சேகர்பாபுவுடனும், மயிலை வேலு மா.சுப்ரமணியனுடனும் அண்டர்ஸ்டாண்டிங்கில் செல்வதால், அவர்கள் மாவட்டத்திற்குள் பிரச்னை பெரிதாக இல்லை. ஆனால், சிற்றரசு யாருடனும் ஒட்டி உறவாடுவதில்லை. உதயநிதியோடு மட்டும்தான் அவர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

ஜெ.அன்பழகன்

இந்த நெருக்கம் பலரது கண்ணையும் உறுத்துகிறது. இந்தச் சூழலில்தான், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் எஸ்.மதன்மோகன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அனுபுதுரை, ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு ஆகியோர், சிற்றரசுவுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு மனுத்தாக்கல் செய்தனர். இது சிற்றரசுக்கு கடும் அதிர்ச்சி.

இத்தனைக்கும் சிற்றரசு உதயநிதி மூலம் மாவட்டப் பொறுப்பாளரானது மட்டுமின்றி, அவரின் பேக்கப்பில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது அந்த மூவருக்கும் நன்றாகத் தெரியும்.

உதயநிதியுடன் சிற்றரசு

தன் மகனின் படிப்பு சம்பந்தமாக லண்டன் சென்றிருக்கிறார் உதயநிதி. வெளிநாடு கிளம்புவதற்கு முன்னதாக, 'சிற்றரசு தான் மாவட்டச் செயலாளர்' என்பதை இதர நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார். ஆனால், அவர் வார்த்தையும் உதாசீனப்படுத்தி, சிற்றரசுவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், உதயநிதியும் அப்செட். லண்டனிலிருந்தபடி அவர் தொடர்புகொண்டு விசாரித்தபோது, 'எங்க பலத்தைக் காட்டத்தான் வேட்புமனு தாக்கல் செய்தோம். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியாதுனு தெரியும்' என்று விளக்கமளித்திருக்கிறார்கள் சிற்றரசுக்கு எதிராகக் களமிறங்கியவர்கள். இந்த கூத்து ஒருபுறமிருக்க, இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது.

தற்போது தேர்வாகியிருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களில், கணேஷ்பிரபு என்கிற ராஜேஷ் என்பவரது பெயர் 6-வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் மருமகன்தான் இந்த ராஜேஷ். பொதுக்கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஒட்டப்படும் போஸ்டர் ஒன்றில்கூட ராஜேஷின் பெயர் இருந்தது கிடையாது. பகுதிச் செயலாளர் மதன்மோகனை இருமுறை இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றிருந்தார் ராஜேஷ். அதனால்தான், உழைத்தவர்களுக்கும், சீனியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை ராஜேஷுக்குக் கொடுத்திருக்கிறார் மதன்மோகன்.

கணேஷ்பிரபு என்கிற ராஜேஷ்

அதேவேளையில், சிற்றரசு மாவட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவின் தலையீடும் அதிகம். தன் மாவட்டத்திற்கு அருகாமையிலிருக்கும் மாவட்டம் என்பதால், தனக்குத் தோதான ஒருவர் மாவட்டப் பொறுப்பில் இருப்பதையே சேகர்பாபு விரும்புகிறார். ஆனால், சிற்றரசுவிடம் அது எடுபடவில்லை. மொத்தத்தில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியும், மேற்கு மாவட்டமும் சிற்றரசு ஒருவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பது மட்டும் புலப்படுகிறது!” என்றனர்.

மாவட்டச் செயலாளர் சிற்றரசு தரப்பில் பேசியவர்கள், “மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலாளரில் தொடங்கி, பொதுக்குழு உறுப்பினர்கள் வரை மொத்தமாக ஒரு பேனல் என்றழைக்கப்படும். ஒரு பேனலில் ஒரு மாவட்டச் செயலாளர் பெயர்தான் எழுதப்பட வேண்டும். செயற்குழுவுக்கு தொகுதிக்கு மூன்று பேர் தேவை. ஆனால், மதன்மோகன் தரப்பிலோ, மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு அவர் பெயரையும், மா.பா.அன்புதுரை பெயரையும் சேர்த்தே எழுதியிருந்தார்கள். செயற்குழு, பொதுக்குழுவுக்கும் போதுமான ஆட்கள் அவர்களிடம் இல்லை. இதையெல்லாம் நாங்கள் எதிர்த்து வாதிட்டோம். தலைமையிலிருந்து அவர்களிடம் விசாரணை செய்தபோது, ‘சும்மா மனுத்தாக்கல் செய்தோம்’ என்றனர். இதனால், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கே டென்ஷன் எகிறிவிட்டது” என்றனர்.

மாவட்ட நிர்வாகிகள்

மதன்மோகன் தரப்பில் பேசியபோது, “தமிழகத்திலுள்ள அத்தனை மாவட்டங்களிலும் அமைச்சர்களை எதிர்த்து எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. மற்ற அனைத்து மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து பலரும் மனுத்தாக்கல் செய்தனர். அதனால், மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று யாருமே சொல்ல முடியாது. அதுதான் கட்சியின் ஜனநாயகம். இருந்தபோதும், மீண்டும் சிற்றரசுதான் வரப்போகிறார் என்பது முன்பே உறுதியாகிவிட்டதால், பெயரளவுக்கு மனுத்தாக்கல் செய்தோம். அவ்வளவுதான்!” என்றதோடு முடித்துக் கொண்டனர்.

எது எப்படியோ, வெளிநாடு சென்றிருக்கும் உதயநிதி, சென்னை திரும்பியதும் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு மண்டகப்படி இருக்கும் என்கிறது அறிவாலய வட்டாரம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/three-nominations-against-chitrarasu-whats-happening-in-dmk-chennai-west-district

01.10.22 சனிக்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | October - 01 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.



source https://www.vikatan.com/spiritual/astrology/01102022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மனிதக்கழிவை மனிதர்களே அகற்றலாமா? தனியொரு மனிதன் பெற்றுத்தந்த தீர்ப்பு!

மனிதக்கழிவுகளை துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டு அகற்றும் நிலை இனி தொடர்ந்தால் எங்கு நடக்கிறதோ அந்த மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று வழக்கறிஞர் அய்யா மேற்கொண்ட பொது நல வழக்கில்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் கையால் மலம் அள்ளும் முறை என்கிற கொடுமையிலிருந்து துப்புரவுத் தொழிலாளர்களைக் காக்கும் விதத்தில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த வழக்கினைத் தொடர்ந்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் அய்யாவிடம் பேசுகையில்...

வழக்கறிஞர் அய்யா

"கையால் மலம் அள்ளும் முறைக்கு (manual scavenging) எதிராக சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட, இன்றைக்கும் கழிவுநீர் தொட்டியில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறக்கப்படுகிற அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கழிவுநீர் தொட்டியில் இறங்கும்போது விஷவாயு தாக்கி ஆண்டுக்கு சுமார் 15 துப்புரவுத் தொழிலாளர்கள் இறக்கின்றனர்.

இந்த அவலம் பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து வருவது வேதனைக்குரியது. மேலை நாடுகளைப் போலவே அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் கிடைக்கப்பெறும் சூழலில்தான் நாம் இருக்கிறோம். அரசின் பல துறைகளிலும் நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டு விட்ட நிலையில் துப்புரவுத் தொழிலில் மட்டும் நவீன வசதிகளை பெரிய அளவில் கொண்டு வரவில்லை.

“டிஜிட்டல் இந்தியாவிலும் கையால்தான் மலம் அள்ள வேண்டுமா?” #AnnihilateCaste #EndManualScavenging

சாக்கடை அடைத்துக் கொண்டால் மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியே எடுத்து விட முடியும். ஆனால் மண் மற்றும் சகதியை ஆள் இறங்கித்தான் அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது. மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டே அகற்றுவதில் சாதிய ஒடுக்குமுறையும் அடங்கியிருக்கிறது. பட்டியலின சமூகங்களில் ஒன்றான அருந்ததியர் சமூக மக்கள்தான் இத்துப்புரவுத் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். சமூகப் படிநிலையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட அச்சமூகத்தினர் வேறு வழியின்றி இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி மரணமடைந்தால் கூட இறந்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாகக் கூறி மீண்டும் இதே துப்புரவுப் பணியைத்தான் கொடுக்கிறார்கள்.

இந்த சமூக அவலத்தைக் களையும் நோக்கோடு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வெளிநாடுகளைப்போல் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான கவச உடை வழங்கப்பட வேன்டும் என்பதை வலியுறுத்தி பொது நல வழக்கினைத் தொடர்ந்தேன். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு...

துப்புரவு பணியாளர்

"இன்றும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் தொடர்வது வேதனைக்குரியது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இனி இது போன்ற அவலத்தை நீதிபதிகள் பார்க்கும்போது நீதிமன்றமே இந்த வழக்கை எடுத்துக் கொண்டு விசாரிக்கும். துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றுவதை உரிய புகைப்பட ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கும் நிலையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் பணியிடை நீகம் செய்யப்படுவார் என்று தெரிவித்தனர். மேலும் இது குறித்த விரிவான தகவல்களுடனான அறிக்கையை சமர்ப்பிக்க மனுதாரரான எனக்கும், அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளனர்" என்கிறார் அய்யா. 

மனிதக்கழிவை அகற்றும் துப்புரவுப் பணியில் ரோபோ பயன்பாடு சாத்தியமா? என்பது குறித்து கேள்வி கேட்ட நீதிபதிகள் கையால் மலம் அள்ளும் முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலும் இது தொடரும் நிலை என்றைக்கு மாறும் எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற ரயில் பெட்டிகளில் கழிப்பறை தேக்கத் தொட்டியோடு அமைக்கப்படுகிறது. இந்தியாவுக்குள் இயங்கும் ரயில்களில் தண்டவாளத்திலேயே கழிவுகள் விழும் வகையில் நீண்ட காலமாக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்து, அம்முறை சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மாறியது. மனிதக் கழிவை மனிதர்களைக் கொண்டே அகற்றுவது என்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது. மனிதத்தன்மை அற்றதும் கூட. இதன் விளைவாக தொடர்ச்சியாக மரணங்கள் ஏற்பட்டும் கூட இந்நிலை தொடர்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. நவீன தொழில்நுட்பத்தை துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்துவது உடனடி அவசியம். 



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/can-humans-eliminate-human-wastea-single-man-received-judgment

வியாழன், 29 செப்டம்பர், 2022

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக வழக்கறிஞர் வெங்கடரமணி நியமனம்! - யார் இவர்?

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக 91 வயது நிரம்பிய கே.கே.வேணுகோபால் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தப் பதவியிலிருக்கிறார். தலைமை வழக்கறிஞர் பதவி என்பது பொதுவாக 3 ஆண்டுக்காலத்துக்கு உரியது. இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தலைமை வழக்கறிஞராக மேலும் 3 மாதங்கள் தொடர அவரை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக்கொண்ட அவா் பதவியில் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த நீட்டிப்புக் காலமும் இன்றுடன் முடிவடைகிறது. இவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு விரும்பிய போதிலும், வயது மூப்பு காரணமாக வேணுகோபால் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

கே.கே.வேணுகோபால்

அதனால் மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முகுல் ரோஹத்கி இரண்டாவது முறையாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்திருக்கிறார். இவர், பதவியேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முகுல் ரோகத்கி

இவர், தமிழ்நாடு பார் கவுன்சிலில் கடந்த 1977-ம் ஆண்டு பதிவுசெய்தார். 1982-ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியிருக்கிறார். சுற்றுச்சூழல் சட்டங்கள், வரி தொடர்பான வழக்குகள், அரசியல் சாசனம், பழங்குடியினர் உரிமைகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் உரிமைகள் குறித்த பல வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார். பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுகள், மத்திய அரசின் சார்பில் வாதாடியிருக்கிறார். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/r-venkataramani-next-attorney-general-of-india-to-succeed-k-k-venugopal

``விலையேற்றம்தான் திமுக-வின் `ஆட்சி' மாடல்!" - சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி காட்டம்

மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் சிவகாசியில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். இதில், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், கழக உறுப்பினர்கள் உட்பட பல கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ``தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசியப் பொருள்கள் முதல் அனைத்துப் பொருள்களின் விலையும் ஏறிவிட்டது. தீப்பெட்டி தொழிலாளர்களும், பட்டாசு தொழிலாளர்களும் விலையற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க என்றாலே விலையேற்றம்தான். விலையேற்றம்தான் தி.மு.க-வின் ஆட்சி மாடல். ஆனால் அ.தி.மு.க உழைப்பாளர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடிய கட்சி. பிழைத்துக்கிடப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை தரக்கூடிய கட்சி தி.மு.க. தமிழ்நாட்டின் நலனுக்காகவும், விருதுநகர் மாவட்ட மக்களின் நலனுக்காகவும் மக்கள் கேட்க... கேட்க எண்ணற்ற பல திட்டங்களைத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி.

பொதுக்கூட்டம்

பட்டாசு தொழிலுக்கு தடை வந்தபோது தொழிலாளர் சங்கத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க தனியாகவே நின்று பட்டாசு தொழிலாளர்களுக்காக வழக்கறிஞரை நியமித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியது. இது பட்டாசு தொழிலாளர்களுக்கும் தெரியும். எம்.ஜி.ஆரின் வழியில் வந்த அ.தி.மு.க-வினருக்கு தவறு செய்யும் எண்ணமே வராது. தவறுசெய்பவர்களைக்கூட அன்பால் தட்டிக்கொடுத்து அரவணைத்துச் செல்லும் கட்சிதான் அ.தி.மு.க. ஆனால் குறை கண்டுபிடித்தே பெயர் வாங்க நினைப்பவர் மு.க.ஸ்டாலின்.

மாநில நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள், புதிய மேம்பாலங்கள் என அனைத்து சாலைகளும் அ.தி.மு.க ஆட்சியில் சீரமைக்கப்பட்டன. மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இன்று தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. காரணம் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்படும் அழுத்தமும் நிர்பந்தமும்தான். இந்த அழுத்தமும் நிர்பந்தமும் அ.தி.மு.க ஆட்சியில் என்றைக்கும் கொடுக்கப்பட்டது கிடையாது" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-ex-minister-rajendra-balaji-slams-dmk-govt-at-sivakasi-party-meeting

மின் தடை; எங்கும் இருள்… வீதியில் இறங்கிய மக்கள்! - அரசின் அலட்சியத்தால் இருளில் மூழ்கிய புதுச்சேரி

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறைகளை தனியார்மயமாக்குவதற்கு முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கான பணிகளைத் துரிதப்படுத்திவருகிறது. புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது.

சாலை மறியல்

ஆனால், போராட்டக்குழுவினர் அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதற்கிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர் போராட்டக்குழுவினர். அதேசமயம் போராட்டத்தைத் தடுப்பதற்காக மின்துறையை தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பணிகள் துறையாக அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மின்துறைத் தலைவர் சண்முகம் ஊழியர்களுக்கு வெளியிட்ட எச்சரிக்கை செய்திக்குறிப்பில், ``அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின்துறைகளின் செயல்திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு மின்துறைகளை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது. மின்துறை ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டம், பணி விதிகளுக்கு எதிரானது. எனவே, மின் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பணி நடத்தை விதிகளின்படி, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம், பணி இடைமுறிவாகக் கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் மின்துறை ஊழியர்கள் தனியார்மயத்தைக் கண்டித்து பிப்ரவரி 1-ம் தேதி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றிருந்தனர். அதையடுத்து அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என்று உறுதியளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அப்போது நிறுத்தினர். 

போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

அதையடுத்து கடந்த மே மாதம் அரசு மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. அதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, மே 23-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். அப்போதும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், மின்துறை தனியார் மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் முன்மொழிவுக்கான கோரிக்கை செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கும் என்றும் நவம்பர் 25-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் மின் ஊழியர்கள் மீண்டும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். புதுவை முழுவதும் மின்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் திரண்டனர்.

அங்கு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை மூடினர். மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2,000-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதனால் மின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மின் கட்டண வசூல் மையங்களும் மூடப்பட்டதால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். செய்தியாளர்களைச் சந்தித்த புதுவை மின்துறை போராட்டக் குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன், ”நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், எங்களை அழைத்து பேசாமல் அரசு தனியார்மயமாக்க  டெண்டர் கோரியுள்ளது. இதற்காக நாங்கள் காலவரையற்ற போராட்டத்தினை தொடங்கி உள்ளோம். மின்துறை தனியார்மயமானால் எங்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.

சாலை மறியலில் போலீஸாருடன் வாக்குவாதம்

ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்புதான். முதல்வர் ரங்கசாமி, பொதுமக்களை கலந்து ஆலோசிக்காமல் மின்துறை தனியார் மயமாக்கப்படாது என உறுதி அளித்திருந்தார். ஆனால் பொதுமக்களை கருத்து கேட்கவில்லை. இதுவரை பொதுமக்கள் பாதிக்காத வகையில் தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதனால் எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. நாங்கள் மின்கட்டணத்தையும் வசூல் செய்ய மாட்டோம். எந்த பழுதாக இருந்தாலும் சீரமைக்க மாட்டோம். தனியார்மயமாக்கலை ரத்து செய்யும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்” என்றனர். அதன் எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் மின்சாரம் தடை ஏற்பட்டது. போராட்டத்தினால் மின்துறை ஊழியர்கள் மின் தடையை சரி செய்ய வரவில்லை. மின் தடையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகரிலும், கிராமங்களிலும் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். உயர் அதிகாரிகள் தரப்போ, அரசையும், முதல்வர், மின்துறை அமைச்சரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். பல மணி நேரம் மின் தடை நீடிப்பதால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலையின் இருபுறமும் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக புதிய பேருந்து நிலையம், உருளையன்பேட்டை, பெரியார் நகர், சக்தி நகர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்தடையை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் உள்ளூர், வெளியூர் பஸ்கள் புதிய பஸ்நிலையத்துக்கு வரமுடியவில்லை. சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறது.

"மின் தடையால் இரவில் தூங்க முடியவில்லை. குளிக்கவோ, கழிவறை பயன்படுத்த முடியாமல் அவஸ்தை படுகிறோம். குளிக்காமல் வேலைக்குச் சென்று வருகிறோம்” என்றும், “மின்துறை தனியார்மயமாக்கல் விவகாரத்தால்தான் மின் துறையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களை விற்கும் பணியை மத்திய அரசு புதுச்சேரியிலும் துவக்கிவிட்டது” என்றும் குமுறுகின்றனர். மின்துறை போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் அதிகாரிகள் செல்போன் எடுப்பதை தவிர்த்து வருகின்றனர். மின்துறை அமைச்சர் நமச்சிவாயமோ குஜராத்தில் விளையாட்டு போட்டிகள் நிகழ்வில் பங்கேற்கச் சென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக அரசு எந்திரத்தின் அலட்சியத்தால் இருளில் மூழ்கிக் கிடக்கிறது புதுச்சேரி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/protest-continued-in-puducherry-over-privatization-of-power-supply

நட்சத்திரப் பலன்கள்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6 வரை #VikatanPhotoCards

அசுவினி
பரணி
கிருத்திகை
ரோகிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
அஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி


source https://www.vikatan.com/spiritual/astrology/astro-predictions-based-on-star-signs-for-the-period-of-september-30th-to-october-6th

பாஜக-வை நிராகரித்த சுப்புலட்சுமி முதல் குமுறும் நயினார் நாகேந்திரன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

தமிழ்நாடு முழுவதும் ‘மோடி கபடி லீக்’ போட்டிகள் நடந்துவந்த வேளையில், தமிழக பா.ஜ.க-வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியிருக்கிறார்.

பாலாஜி தங்கவேல்

அந்தப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, ‘உங்க பூசாரித்தனமும் வேண்டாம்... பொங்கச்சோறும் வேணாம்...’ என்று அவர் கட்சியிலிருந்து விலகினாராம். எல்லாவற்றிலும் தன்னுடைய பெயரை முன்னிலைப்படுத்தச் சொல்வது, போட்டிக்கான பொருளாதார விவகாரங்களைக் கவனித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் ஏற்பட்ட மோதலே பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

தி.மு.க-விலிருந்து விலகிய துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை, மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்க கொங்கு மண்டல சீனியர்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். இந்தத் தகவலை ஐடி விங் மூலமாகக் கசியவும் விட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ, “எனக்கு வயசும் ஆகிடுச்சு... என்னால கட்சிப் பணியும் செய்ய முடியாது. அ.தி.மு.க-வுக்குப் போய் இருக்கிற மரியாதையைக் கெடுத்துக்கொள்ளவும் விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டாராம். “அப்படியானால் பா.ஜ.க?” என்று கேட்டபோது, “நான் இணையும் அளவுக்கு அந்தக் கட்சிக்குத் தகுதியே இல்லை.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

திராவிட இயக்கம் சார்பாக, மதவாத அரசியலுக்கு எதிராக மட்டுமே என்னுடைய குரல் ஒலிக்கும்” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம் சுப்புலட்சுமி ஜெகதீசன். “பா.ஜ.க-வில் சேர்ந்தால், உடனே பெரிய பொறுப்பு கிடைக்கும். இப்படி ஓவர் கான்ஃபிடென்ட்டாகப் பேசி உதாசீனப்படுத்திவிட்டாரே...” என்று புலம்புகிறார்கள் அவரை அண்டிப் பிழைக்கும் சிலர்.

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவெடுத்துவிட்டாராம் கனிமொழி எம்.பி. இதனால் மக்களைச் சந்திக்கக் கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் அவர் தவறவிடுவதே இல்லையாம். புதிய வாக்காளர்கள், இளைஞர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக கல்லூரி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்.

கனிமொழி

சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொண்ட அவர் இறுதியில், “வருங்காலம் உங்கள் கையில்... எனவே இனிவரும் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” எனச் சொல்லிப் பேச்சை முடித்தார். “அறிவியல் கருத்தரங்கில் அரசியலா... பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டாரா அக்கா?” என்று பேசிக்கொள்கிறார்கள் உடன்பிறப்புகள்.

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் தி.மு.க-வுக்குச் செல்லவிருப்பதாக அடிக்கடி வதந்திகள் வலம்வருகின்றன. சமீபத்தில் மீண்டும் அப்படியொரு தகவல் பரவ, மேலிடத்திலிருந்து விசாரித்தார்களாம். ‘`சத்தியமா, நான் கட்சி மாறலை...’’ என்று மறுத்தவர், உடனடியாக இந்த வதந்தியைப் பரப்பியது யார் என்ற விசாரணையில் இறங்கியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்

கடைசியில் சொந்தக் கட்சியினரே இந்த வேலையைச் செய்வதைக் கண்டுபிடித்திருக்கிறார். கட்சியில் அவரது வளர்ச்சி பிடிக்காத சிலரே ஆள்வைத்து சமூக வலைதளங்களில் இது போன்ற வதந்திகளைப் பரப்புவதாக நயினார் நாகேந்திரன் தரப்பினர் குமுறுகிறார்கள்.

முதல்வர் ரங்கசாமிக்கும், பா.ஜ.க-வுக்கும் ஏற்பட்டிருக்கும் உரசல், வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதன் உச்சகட்டமாக செப்டம்பர் 23-ம் தேதி முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரமும், பா.ஜ.க-வுக்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளனும் சட்டப்பேரவை வளாகத்திலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்துவிட்டார்கள். அதில் கடுப்பான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க முக்கிய நிர்வாகி ஒருவரை அழைத்து, “இதை நான் அமித் ஷாவிடம் சொன்னால் என்னவாகும் தெரியுமா?” என்று சீறினாராம்.

முதல்வர் ரங்கசாமி!

அதற்கு அந்த நிர்வாகி, “அவர் அனுமதியுடன்தான் இதெல்லாம் நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார். பா.ஜ.க தனக்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி, தனது எம்.எல்.ஏ-க்களையும், ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறாராம்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க-வில், தன் மகன் கெளதம சிகாமணிக்கு மாவட்டச் செயலாளர் பதவி அல்லது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பதவி வேண்டுமெனக் காய்நகர்த்திவந்தார் அமைச்சர் பொன்முடி. அதேபோல அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த லட்சுமணனும் மாவட்டச் செயலாளர் பதவிக்குக் காய்நகர்த்தினார்.

கௌதம சிகாமணி

ஒருவேளை தன் மகனுக்கு இல்லாமல் லட்சுமணனுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டால் தன் செல்வாக்கு குறையும் என நினைத்த அமைச்சர், ``இந்த முறை யாரும் போட்டியிட வேண்டாம். புகழேந்தியே இருக்கட்டும்" எனக் கூறி யாரையும் போட்டியிடவிடாமல் நாசுக்காகத் தவிர்த்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, தன் மகனையும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் அமர்த்திவிட்டார். “விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குப் பிறகு தன் மகனுக்கான இடத்தை உறுதிசெய்துவிட்டார் பொன்முடி” என முணுமுணுக்கிறார்கள் மாவட்ட தி.மு.க-வினர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-subbulakshmi-jagatheesan-nagenthiran-politics-and-other-political-happenings