Ad

புதன், 3 மார்ச், 2021

Election Updates: தொகுதி பங்கீடு... தொடரும் இழுபறி - தீவிர ஆலோசனையில் கட்சிகள்!

கூட்டணியில்தொடர் இழுபறி..!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு பிரதான கட்சிகளிலும் இன்னும் கூட்டணியை இறுதி செய்யப்படாத இழுபறி நிலையே நீடிக்கிறது.

அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதேபோன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ள நிலையில், தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தி.மு.க கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. ம.தி.மு.க-வும் இரட்டை இலக்கில் தொகுதிகள் கேட்பதால் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி நிலையை எட்டாமல் இழுபறி நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

`வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம்’

அ.தி.மு.க வில் இன்று காலை வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. சுமார் 8,000 நபர்கள் விருப்பமனு அளித்திருந்த நிலையில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க கூட்டணிக்குள் அ.ம.மு.க வருமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியை பொறுத்தவரையில் பா.ம.க வுடனான தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. பா.ஜ.கவுடனும் தே.மு.தி.க வுடனும் இழுபறி நிலையே நீடிக்கிறது. இரண்டு நாள்களில் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, பிரசார பணிகள் தொடங்கும் என அ.தி.மு.க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும் இங்கு வாய்ப்பு கிடைகாதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விருப்பமனு அளித்தவர்கள் மத்தியில் பேசுகையில் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/tamilnadu-election-2021-and-other-current-updates-04-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக