"தமிழக மக்களுக்கு எதிரான விவசாயத் சட்டங்கள், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் என அனைத்தையும் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அதனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த அரசுதான், அ.தி.மு.க அரசு. தமிழக மக்களை டெல்லியில் அடகு வைத்த அரசு அ.தி.மு.க அரசு. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். அதாவது, பத்து வருடங்களாக நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வர வேண்டும், அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்கள்" என்று கனிமொழி எம்.பி பேசினார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள கரூர் வருகை தந்தார் கனிமொழி. கிருஷ்ணராயபுரத்தில் போட்டியிடும் சிவகாமசுந்தரி, குளித்தலையில் போட்டியிடும் மாணிக்கம், அரவக்குறிச்சி வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ மற்றும் கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர்களுக்கு வாக்குகள் கேட்டு, பல இடங்களில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
"தமிழக மக்களுக்கு எதிரான விவசாயத் சட்டங்கள், நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் என அனைத்தையும் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்தது. அதனை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த அரசுதான், அ.தி.மு.க அரசு. தமிழக மக்களை டெல்லியில் அடகு வைத்த அரசு அ.தி.மு.க அரசு. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். அதாவது, பத்து வருடங்களாக நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வர வேண்டும், அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்கள். தற்பொழுது உச்சிவெயில் நேரத்தில் இவ்வளவு பேர் இங்கு கூடி வேட்பாளரையும் என்னையும் வேட்பாளரையும் வரவேற்க காத்திருப்பதே அதற்கு சாட்சி. தி.மு.க தலைவர் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தவுடன், அரசு பணிகளில் காலியாக உள்ள மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்தப் பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். தி.மு.க தலைவர் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். பல இடங்களில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தற்போது, ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாதத்தில் பெரும்பாலான வருவாய் தண்ணீருக்கே செலவிட்டு வருகிறார்கள். தினந்தோறும் கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இல்லத்தரசிகள் சென்றால் இன்று ஒரு பொருள் நாளை ஒரு பொருள் என மாதம்தோறும் அலைய வேண்டிய நிலை உள்ளது. 'இன்று போய் நாளை வா' என்பதை ரேஷன் ஊழியர்கள் தாரக மந்திரமாக வைத்துள்ளனர்.
Also Read: கரூர்: 'மணல்' பேச்சு; செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
தினந்தோறும் ஒரு வண்ணத்தில் மாறி கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நம்மைப் பார்த்து 'பச்சோந்தி' என்று விமர்சனம் செய்கிறார். 'ஊர்ந்து போய் பதவி ஏற்றுக் கொள்ள, நானென்ன பாம்பா, பல்லியா?' என்று கேட்கிறார் பழனிசாமி. இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ள நமக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் . தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழ் மொழியை தமிழர்களின் அடையாளங்களை அனைத்தையும் டெல்லியில் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியை டெல்லியில் இருந்து நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் ஆட்சி தமிழகத்திலிருந்து நடைபெற வேண்டும்
அப்படி என்றால் திமுக ஆட்சிக்கு வரவேண்டும். குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மறைந்த தி.மு.க தலைவரும், எனது தந்தையுமான கருணாநிதி முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, அவர் எந்த சட்டமன்றத் தொகுதியிலும் தோல்வியுற்றது இல்லை. அவர் முதன்முதலாக, சட்டப்பேரவையில் எழுப்பிய முதல் கேள்வியில், குளித்தலை தொகுதியில் அவர் அப்போது நடத்தி வெற்றிக் கண்ட நங்கவரம் விவசாய தொழிலாளர்கள் பிரச்னையை தான் பேசினார்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kanimozhi-speech-against-edappadi-palanisamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக