வாரத்தின் எல்லா நாள்களும் வீட்டிலுள்ளவர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கேற்றபடி சமைத்து, பிடிக்கிறதோ இல்லையோ, அதையே தானும் சாப்பிட்டு ஓடிக்கொண்டிருப்பவர்கள் பெண்கள். என்றாவது ஒருநாள் வீட்டில் சமையல் வேலை இல்லை என்றால் தன் ஒருத்திக்காக சமைப்பதா என நினைத்து கிச்சனுக்கு விடுமுறை விடும் பெண்களே அதிகம்.
அந்த ஒருநாளாவது தனக்குப் பிடித்தவற்றை எல்லாம் செய்து சாப்பிட நினைக்கும் பெண்கள் அரிதினும் அரிது. காய்கறி பிடிக்காத குழந்தைகள், எண்ணெய் இல்லாத சமையல் கேட்கும் மாமனார், மாமியார், டயட் மெனு சொல்லும் கணவர்... இப்படி தினசரி சமையலில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.
இவை எல்லாவற்றுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு இந்த வாரம் முழுக்க முழுக்க கட்டுப்பாடுகளற்ற மெனுவை பிளான் செய்து திகட்டத் திகட்ட சாப்பிட்டு மகிழுங்கள்.
கலோரி முதல் மெனுவில் இடம்பெறும் ஐட்டம் வரை எதையும் கணக்குப் பார்க்காமல் என்ஜாய் செய்ய உங்களுக்கு சில ரெசிபி சாய்ஸ் இங்கே...
தேவையானவை:
காளான் - ஒரு பாக்கெட்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
பெரிய வெங்காயம் - அரை வெங்காயம் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
தக்காளி - 2 (நறுக்கியது)
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
மட்டன் மசாலா பவுடர் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலா - கால் டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்து, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை, வதக்கவும். அடுத்து, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, காளான் மற்றும் பச்சைப் பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், மட்டன் மசாலா, தனியாத்தூள், கரம்மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி... ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும். பிறகு, உப்பு சரி பார்த்து, துருவிய தேங்காயைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு, தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
தேவையானவை:
கொத்தமல்லித் தழை - அரை கப் (பொடியாக நறுக்கியது)
புதினா இலை - அரை கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2
பனீர் - 500 கிராம் (சதுரமாக வெட்டியது)
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
சீரகம் - 3 சிட்டிகை
பெரிய வெங்காயம் (மீடியம் சைஸ்) - 2 (பொடியாக நறுக்கியது)
பிரியாணி இலை - 2
பூண்டு பல் - 5
ஃப்ரெஷ் க்ரீம் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 2
தயிர் - அரை கப்
கரம் மசாலா பவுடர் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
Also Read: பீட்ரூட் சாலட் | பரங்கிக்காய் கூட்டு | ப. மிளகாய் சட்னி - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes
செய்முறை:
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சதுரமாக நறுக்கிய பனீரை வறுத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்டு சூடானதும், சீரகத்தைப் போட்டு, பொரிந்து வெடித்த பிறகு வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, ஆற வைக்கவும். தயிரைக் கடைந்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஆறிய வெங்காயத்துடன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு மசித்துக் கொள்ளவும். அடுப்பில், ஒரு கடாயை வைத்து, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த வெங்காய கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், கரம் மசாலா பவுடர், உப்பு, ஃப்ரெஷ் க்ரீம், கடைந்த தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். லேசாக கொதித்ததும் வறுத்த பனீர் க்யூப்ஸ், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் போட்டுக் கிளறி, மூடி போட்டு குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக விட்டு, மிளகுத்தூளைத் தூவி இறக்கவும். இது, சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு சரியான சைட் டிஷ்.
தேவையானவை:
வெண்ணெய் - 2 கப்
துருவிய பனீர் - ஒரு கப்
வெங்காய பேஸ்ட் - ஒரு கப்
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தக்காளி பேஸ்ட் - அரை கப்
தாய்லாந்து மிளகாய் - 3 (பாதியாக உடைத்தது)
பிரெட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்
புளிப்பான க்ரீம் - 3 டீஸ்பூன்
முந்திரி சிரோஞ்சி பேஸ்ட் - 3 டீஸ்பூன்
முந்திரி - 20 (பாதியாக உடைத்தது)
தாமரை விதை - 10 (வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்தது)
மசாலா:
பெரிய ஏலக்காய் - 2 ( பொடி செய்தது
குட்டி ஏலக்காய் - 5 ( பொடி செய்தது)
கரம் மசாலா பவுடர் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
ஜாதிக்காய், ஜாதிபத்ரி, சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
Also Read: நாவில் எச்சில் ஊறும் நாடன் சிக்கன், பொலிச்சது ஃபிஷ் - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து, சிறிது வெண்ணெய் போட்டு உடைத்த முந்திரிகளை போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு, அதில் ஏலக்காய் தூள், சீரகம், தாய்லாந்து மிளகாய், வெங்காய பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை, மிதமான தீயில் கிளறவும். இத்துடன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள்களில், சர்க்கரையைத் தவிர்த்து, மற்றவற்றை இதனுடன் சேர்த்து தீயை அதிகப்படுத்தி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். தொடர்ந்து, முந்திரி சிரோஞ்சி பேஸ்ட், பிரெட் கிரம்ப்ஸ், துருவிய பனீர் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தீயை மிதமாக்கி, மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும். வெந்ததும் மூடியைத் திறந்து தாமரை விதை, உடைத்த முந்திரி, குட்டி ஏலக்காய் பவுடர் தூவி, அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/recipes/recipes-of-mushroom-peas-curry-and-butter-khaju-paneer-and-paneer-kali-mirch
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக