Ad

திங்கள், 15 மார்ச், 2021

சென்னை: ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட பெண்ணின் படம்; குற்றத்தில் ஈடுபட்ட நண்பர் சிக்கியது எப்படி!

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் குடியிருப்பவர் இளம்பெண் நர்மதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். இவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியவர், `உன்னுடைய ஆபாச படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன். அதைப் போல நீயும் எனக்கு வேற ஆபாச படங்களை அனுப்பு' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்திருக்கிறார். உடனடியாக நர்மதா, தன்னுடைய வாட்ஸ்அப்பை பார்த்தபோது அதில் நர்மதாவின் முகத்தை வேறொரு பெண்ணின் ஆபாச படத்துடன் இணைத்து மார்பிங் செய்யப்பட்டது தெரியவந்தது. அதைப் பார்த்து நர்மதா அதிர்ச்சியடைந்தார்.

ஆபாச படம்

மீண்டும் அந்த மர்ம நபர், நர்மதாவுக்கு போன் செய்து ஆபாச படங்களை அனுப்பும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். நர்மதா அந்த நபரை திட்டியிருக்கிறார். இதையடுத்து நர்மதா குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறான தகவல்களை அந்த நபர் பதிவு செய்திருக்கிறார். இனியும் தாமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்த நர்மதா, திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் போலீஸார் நர்மதாவுக்கு ஆபாச படத்தை அனுப்பப்பட்ட செல்போன் நம்பரைக் கொண்டு விசாரித்தனர்.

Also Read: `பெண்களிடம் செல் நம்பர் வாங்குவார்; ஆபாச படம் அனுப்புவார்!' - வேலூர் டிராஃபிக் எஸ்.ஐ-க்குத் தண்டனை

அந்த நம்பர் யாருடையது என்பதைக் கண்டறிய அம்பத்தூர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியை திருவேற்காடு போலீஸார் நாடினர். அம்பத்தூர் சைபர் க்ரைம் போலீஸார் அந்தச் செல்போன் நம்பர் குறித்து விசாரித்து அதுதொடர்பான தகவல்களை திருவேற்காடு போலீஸாரிடம் தெரிவித்தனர். அந்தத் தகவலின் மூலம் ஆபாச படங்களை அனுப்பியவரைக் போலீஸார் கண்டறிந்தனர். அவரின் பெயர் சந்தோஷ் (22), வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, லத்தேரி, கரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்ததவர் என தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்த போது சந்தோஷ் யார் என்பது தெரிய வந்தது.

பாலியல் தொல்லை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``நர்மதா படித்த இன்ஜினீயரிங் கல்லூரியில் சந்தோஷும் படித்திருக்கிறார். அப்போது நர்மதாவுடன் சநதோஷுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் நட்பாக பழகியிருக்கின்றனர். இருவரும் செல்போன் நம்பர்களைப் பகிர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் சந்தோஷ், படிப்பை பாதியில் நிறுத்தியிருக்கிறார். தற்போது சோளிங்கரிலுள்ள தனியார் நிறுவனத்தில் சந்தோஷ் வேலை பார்த்து வருகிறார். நர்மதாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கு அனுப்பி சநதோஷ் தொல்லை கொடுத்திருக்கிறார். அதன்பேரில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-youth-arrested-for-sending-morphed-picture-of-young-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக