இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்னையில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்ட இருக்கிறார். மேலும் தமிழகத்தில் அடுத்தாண்டில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பாகவும் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாகவும் தீவிர ஆலோசனை நடத்த இருக்கிறார்.
Looking forward to being in Tamil Nadu tomorrow. Will inaugurate and lay the foundation stones of various development projects.
— Amit Shah (@AmitShah) November 20, 2020
நாளை தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் https://t.co/ykLR9ZpexP
அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் ட்விட்டரில் GoBackAmitShah என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. மறுபுறம் TNWelcomesAmitShah என்னும் ஹேஷ்டேகையும் பா.ஜ.கவினர் பயன்படுத்தி வருகிறனர். தமிழகம் வருவது தொடர்பாக நேற்று ட்வீட் செய்திருந்த அமித் ஷா, ``நாளை தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.
எதிரிகள் அவர்தம் படை புகுந்து
— C T Ravi ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) November 21, 2020
நைய புடைய எம்தலைவன் வருகிறார்
தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்
எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே #TNwelcomesAmitshah pic.twitter.com/FpHTtuceBs
தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளரான சி.டி ரவி, ட்விட்டரில், ``எதிரிகள் அவர்தம் படை புகுந்து, நைய புடைய எம்தலைவன் வருகிறார். தமிழ்நாட்டின் விதிமாறும், இனி காண்பீர். எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே ” என பதிவிட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/21-11-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக