திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் புதுகாமூர் சாலையில் உள்ள வீட்டில் உள்ள முக்தா என்ற மூதாட்டி தனது வளர்ப்பு மகள் மீனா என்பவருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் ஜானகிராமன் என்பவர் தனது மனைவி காமாட்சி மற்றும் சுரேஷ், ஹேமநாத் என 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு சமையல் செய்த மூதாட்டி முக்தா, கவனக்குறைவாக சிலிண்டரை அணைக்காமல் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல டீ போடுவதற்காக சமையலறைக்குச் சென்று அடுப்பை பற்ற வைத்திருக்கிறார். அப்போது அறை முழுவதும் சிலிண்டரில் இருந்த எரிவாயு பரவியிருந்ததால் பயங்கர சத்ததுடன் வெடித்தது. அதில் அந்த வீடு தரைமட்டமானதுடன், கான்கிரீட் சுவர்களும் சுக்கு நூறாக நொறுங்கியது.
அதில் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த வந்த ஆரணி தீயணைப்பு துறையினர் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கியிருந்த ஹோமநாத், காமாட்சி சந்திரம்மாள் உள்ளிட்ட 7 பேரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காமாட்சி, சந்திரம்மாள் மற்றும் ஹேமநாத் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தனர்.
அதையடுத்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/general-news/gas-cylinder-fire-accident-near-aarani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக