Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

பார்கின்சன் நோய்... புதிய சட்டத் திருத்தம்! - 2021-ல் ரஷ்ய அதிபர் பதவியைத் துறக்கும் புதின்?

ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின், கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருங்கிணைந்த சோவியத் யூனியனுக்கு பிரதமராகப் (பொறுப்பு) பதவியேற்றார். அவரை அந்தப் பதவியில் நியமித்தவர் அப்போதைய அதிபர் எல்ட்சின்.

அதையடுத்து, அதே வருடம் டிசம்பர் மாத இறுதியில், தன் பதவியை ராஜினாமா செய்த எல்ட்சின், விளாதிமிர் புதினை பொறுப்பு அதிபராக்கினார். அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட புதின் வெற்றி பெற்று இரண்டாவது முறை ரஷ்ய அதிபரானார்.

ரஷ்ய சட்டத்தின்படி, ஒரு நபர் தொடர்ச்சியாக இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதையடுத்து, தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபராகத் தேர்வாகியுள்ள புதினின் அதிபர் பதவி 2024-ம் ஆண்டுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

புதின்

தொடர்ந்து, தானே அதிபர் பதவியில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்ததால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சி உறுப்பினர் வலண்டினா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகள் அடங்கிய சட்டத்தைப் புதுப்பிக்கக் கோரும் மசோதாவைத் தாக்கல் செய்தார். கீழ் அவையில் நடைபெற்ற இந்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் ஒருவர்கூட எதிர்த்து வாக்களிக்கவில்லை. 383 பேரும் ஆதரவாகவே வாக்களித்தனர்.

Also Read: ரஷ்யா: `உலகின் முதல் கொரோனா தடுப்பூசி’ - சொந்த மகளுக்குச் சோதனை செய்து வெளியிட்ட புதின்!

விளாடிமிர் புதின் ரஷ்யாவில் செல்வாக்கு மிக்க நபராகத் இருப்பதால், புதினே அதிபர் பதவியில் மேலும் தொடர வைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

அதையடுத்து, மக்களது விருப்பத்தை அறிய இது தொடர்பான வாக்கெடுப்பும் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதில் 77.93 சதவிகித மக்கள் ரஷ்ய அதிபராக புதின் 2036-ம் ஆண்டுவரை தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 21.6 சதவிகித மக்கள் மட்டுமே எதிராக வாக்களித்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து 2036-ம் ஆண்டுவரை ரஷ்யாவின் அதிபராக புதின் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போது 68 வயதாகும் விளாதிமிர் புதின், தன் 83 வயது வரை ரஷ்ய அதிபராக இருக்கமுடியும் என்ற நிலையில், புதினின் கால் மற்றும் விரல்களில் ஏற்பட்ட வலி காரணமாக உடல் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனைகளின் முடிவுகளில் அவருக்கு பார்க்கின்சன் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

புதின்

இதையடுத்து, புதினின் இரு மகள்களான மரியாவும், கத்ரினாவும் தந்தையின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் 2021-ம் ஆண்டு தொடக்கத்திலேயே அவர் அதிபர் பதவியிலிருந்து விலகக் கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் வாலரி சோலோவி (Valery solovei), ``அதிபர் புதினின் குடும்பம் செல்வாக்கு மிக்க குடும்பம், அதனால் அவர் அதிபர் பதவியில் இருந்து விலகும் முடிவு குறித்து வருகிற 2021 ஜனவரி மாதம் அறிவிக்கக் கூடும்" என்று தெரிவித்தார்.

ரஷ்யாவில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கும் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

ரஷ்ய சட்டப்படி, அதிபர் பதவியில் இருப்பவருக்கு, அவரது பதவிக் காலத்தில் எந்தவொரு குற்றத்துக்காகவும் தண்டனை விதிக்க முடியாது. இந்த விதிவிலக்கு அவர்களின் பதவிக்காலங்களுக்கு பிறகும் வாழ்நாள் முழுவதும் நீட்டிப்பது தொடர்பான சட்டம் ரஷ்ய நாடாளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பதவி விலகும் முடிவை புதின் எடுத்திருப்பதாலேயே, இந்த புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/russian-president-vladimir-putin-to-step-down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக